ரணிலை ஏன் மேற்குலக நாடுகள் பாதுகாக்குகின்றன? : கெஹலிய கேள்வி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெரும்பான்மையினை உறுதிப்படுத்தும் பிரேரணை பயனற்றது. கடந்த நாட்களில் பல பிரேரணைகள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அவையனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புகவெல தெரிவித்துள்ளார்.

எமது நாட்டின் ஜனநாயகம் தொடர்பில் பேசுகின்ற சர்வதேச இராஜதந்திரிகள் நடுநிலையாக செயற்பட வேண்டும். பெரும்பான்மை மக்களுக்கு பயனற்ற ரணில் விக்ரமசிங்கவை மேற்குலக நாடுகள் பாதுகாப்பது ஏன் எனவும் கேள்வியெழுப்பினார்.

தேசிய கலாசார மத்திய நிலையத்தில் இன்று புதன் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!