மஹிந்த தரப்பினரின் சட்டக் கல்வித் தகைமை தொடர்பில் ஆராய வேண்டும் – முஜிபுர்

உதயன் கம்பன்பில, டிலான் பெரேரா உள்ளிட்டோரின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசியல் அமைப்புக்கு எதிராக ஊடகங்கள் மத்தியில் கருத்துக்களை முன்வைத்தவர்களின் கல்வி தகைமைகள் பற்றி பரிசீலணை செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு மனுத்தாக்கல் செய்தது முதல் தொடர்ச்சியாக உதயன் கம்பன்பில, டிலான் பெரேரா உள்ளட்டோர் ஜனாதிபதியின் செயற்பாடுகளை ஆதரித்தே வாதிட்டிருந்தனர்.

ஆனால் அவர்களின் வாதங்களுக்கு எதிராகவே நீதிமன்றம் தீர்ப்பு பெற்றுக்கொடுத்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதிக்கு ஆதராவாக வாதிட்டவர்களின் சட்ட கல்வி தகைமைகள் குறித்து ஆராயவேண்டிய நிலை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!