நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்கள் – மேகாலயாவில் சம்பவம்

மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மேகாலயாவின் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கம் ஒன்றில், அருகில் உள்ள லைடெயின் ஆற்றில் இருந்து தண்ணீர் புகுந்தமையால் 370 அடி ஆழ சுரங்கத்தில் சுமார் 70 அடிக்கு தண்ணீர் நிறைந்துள்ளது.

குறித்த நிலக்கரி சுரங்கத்தில் தண்ணீர் புகுந்தமையால் 5 தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேறிய நிலையில், மேலும் 13 பேர் அங்கு சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

குறித்த சம்பவம் குறித்து நேற்று முன்தினம் காலையில் தகவல் வெளியானது.

இந்நிலையிலல் பொலிஸாரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர்.

சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் கதி என்ன? என்று இதுவரை தெரியவில்லை. அவர்களை உயிருடன் மீட்பதற்காக மீட்புக்குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி