ஒரு தொகுதி புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!

??????????????????????????????????????????????
புதிய அமைச்­ச­ர­வை­யில் இடம்பெறும் ஒரு தொகுதி அமைச்­சர்­கள் இன்று ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் முன்­பா­கப் பத­வி­யேற்­க­வுள்­ள­னர். புதி­தாக நிய­மிக்­கப்­ப­டும் 30 அமைச்­சர்­க­ளின் பட்­டி­யல் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தப் பட்­டி­யல் ரணில் விக்­கி­ரம­சிங்­க­வினால் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன­வுக்கு நேற்று அனுப்­பப்­பட்­டுள்­ளது.

அபி­வி­ருத்தி, மீள்­கு­டி­யேற்­றம் ஆகிய அமைச்­சுக்­க­ளுக்கு நிய­மிக்­கப்­ப­ட­லாம் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட மலிக் சம­ர­வீர, அமைச்­ச­ர­வைப் பட்­டி­ய­லில் ஏற்­பட்ட நெருக்­கடி நிலைமை கார­ண­மாக அமைச்சுப் பதவியை ஏற்பதில்லை என வில­கி­ய­தால் அந்த அமைச்­சுக்­கள் மங்­கள சம­ர­வீ­ர­வின் வசம் ஒப்­ப­டைக்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நிதி, உட்­கட்­டு­மா­னம், அபி­வி­ருத்தி என்­பன பிரதமர் ரணில் வசம் செல்­லும் என்­றும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

அதே­வேளை, இன்று அமைச்­ச­ரவை பத­வி­யேற்பு நடை­பெ­றும். நிதி அமைச்­சர் உட்­பட 15 தொடக்­கம் 20 வரை­யான அமைச்­சர்­கள் இன்று பத­வி­யேற்­பார்­கள் என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அசோக அபே­சிங்க தெரி­வித்­துள்­ளார்.சட்­டம், ஒழுங்கு அமைச்­சர் தொடர்­பாக இன்­ன­மும் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. எஞ்­சிய அமைச்­சர்­கள் அடுத்த சில நாள்­க­ளில் பத­வி­யேற்­பார்­கள் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!