குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சியளித்த ஒபாமா

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா, கிறிஸ்துமஸை முன்னிட்டு நத்தார் தாத்தாவாக வேடமணிந்து குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சாண்டா தொப்பி அணிந்து பை நிறைய பரிசு பொருட்களை கொண்டு தேசிய குழந்தைகள் வைத்தியசாலைக்கு சென்ற ஒபாமாவை பார்த்து அந்த வைத்தியசாலையில் இருந்த குழந்தைகள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இரு பெண் பிள்ளைகளின் தந்தையான நான், அந்த தருணத்தில் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் செவிலியர்,பணியாளர்கள்,வைத்தியசர்களின் பணி மிக முக்கியமானது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என இதன்போது ஒபாமா தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!