திருடப்பட்ட வீடு மீண்டும் கண்டுபிடிப்பு!

செயின்ட் லூயிஸில் திருடப்பட்ட ஒரு (tiny home) வீட்டைக் மீண்டும் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பறிவாளர்களின் உதவியுடன் திருடப்பட்ட இடத்தில இருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் குறித்த வீட்டை நேற்று (புதன்கிழமை) காலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இந்த வீடு தனது கனவு என்றும் அதன்படி ஆண்டுதோறும் நிறுவனம் ஒன்றில் இருந்து எடுத்துக்கொள்வதாகவும் மார்ஷாக் என்ற பெண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை குறித்த வீடு காணாமற் போனதாகவும், இதன் பின்னர் அவ்வீடு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டமையால் பெரும் மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!