வடக்கிற்கு அபிவிருத்தி அமைச்சு உள்ளது கிழக்கிற்கு இல்லை – வியாழேந்திரன்

வடகிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் மிகவும் பாதிக்க்பபட்ட பகுதிகள் வட மாகாணத்துக்கு என்று ஒரு தனியான அமைச்சு உள்ளது ஆனால் கிழக்கு மாகாணமும் யத்தத்தினால் பாதிகப்பட்டது அதற்கு ஒரு அமைச்சு இல்லை என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

1990 ஆண்டுகளில் நடபெற்ற வன்செயல்களில் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏறாவூர் நான்காம் ஐந்தாம் குறிச்சி மிக முக்கயமானதாகும் இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இருந்து சொந்த இடங்களுக்கு திருப்பிய போது எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி இருந்தார்கள்.

ஏறாவூர் நகருக்குள் ஏறாவூர் நான்காம் ஐந்தாம் குறிச்சி கிராமங்கள் இருந்தாலும் உட்கட்டமைப்பு சார்ந்த வசதிகளில் முஸ்லிம் தமிழ் கிராமங்கள் மலை மடு போன்று காட்சிகளிக்கின்றன.

வீடற்ற, மலசல கூடம் இல்லாதவர்கள் வீதிகள் சரியான முறையில் செப்பனிடப்படவில்லை. இவ்வாறு பல்வேறுபட்ட தேவைப்பாடு இங்கே காணப்படுகிறது.

2015ல் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசிலே சில வேலைத்திட்டங்கள் நடைபெற்றாலும். பரிபூரணம் என்ற நிலையை எட்டவில்லை. இந்த பகுதியில் 180 வீடுகள் தேவைப்படும் நிலையில் குறைந்தளவான வீடுகளை கிடைத்துள்ளன.

2020 வரை இந்த நாட்டில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருப்பார் கடந்த காலத்தில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு என வேலைத்திட்டமொன்றினை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அந்த பணியை முன்னெடுத்திருந்தேன்.

வடகிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் மிகவும் பாதிக்க்பபட்ட பகுதிகள் வட மாகாணத்துக்கு என்று ஒரு தனியான அமைச்சு உள்ளது ஆனால் கிழக்கு மாகாணமும் யத்தத்தினால் பாதிகப்பட்டது அதற்கு ஒரு அமைச்சு இல்லை.

மட்டக்களப்பு மாவட்டதில் 36 ஆயிரம் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் உள்ளனர் பல்வேறு பிரச்சினைகள் உள்ள இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பெறுப்பை எடுத்துக்கொண்டேன்.

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2020 வரை இந்த நாட்டில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருப்பார் அவரிடம பேசி அரசியல் கைதிகள் விடுவிப்பு காணி விடுவிப்பு உட்பட எமது 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!