இடைக்கால வரவு – செலவு திட்டத்தில் 1765 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – அரசாங்கம்

ஜனவரி மாதம் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவு திட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்துக்கு சுமார் 1765 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அலரிமாளிகையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் 19 ஆம் அரசியல் அமைப்பின் 51 ஆவது உறுப்புரையினூடா ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று அமைச்சுக்களும் அமைச்சரவை அந்தஸ்து பெற்றுக்கொடுக்க கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!