தேசிய அரசாங்கமா? – அடுத்த வாரம் முடிவு

தேசிய அரசாங்கத்தை அமைப்பதா அல்லது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தையே முன்னெடுடுத்துச் செல்வதா என்று அடுத்தவாரம் தீர்மானிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

புதிய அமைச்சரவையில் 30 அமைச்சர்களையே நியமிக்க முடியும் என்பதால், ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சர் பதவியை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், தேசிய அரசாங்கத்தை அமைத்து, அமைச்சர்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிப்பது குறித்த பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐதேக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அடுத்தவாரமே இதுபற்றி முடிவு செய்யப்படும் என்றும், அலரி மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறிலங்கா அதிபருடனும் பேசித் தீர்க்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!