எதிர்க்கட்சித் தலைவர்: சபாநாயகரின் முடிவு இன்று

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான சர்ச்சை குறித்து சபாநாயகர் கரு ஜெயசூரிய தனது முடிவை இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை சபாநாயகர் அறிவித்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக நாடாளுமன்றம் சென்றமகிந்த ராஜபக்ச, சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டதால், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை செல்லுபடியானதா என்றும் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தநிலையில், நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக, தெரிவு செய்யப்பட்ட அனைவரும், தொடர்ந்தும் தமது கட்சி உறுப்பினர்களாகவே செயற்படுகின்றனர் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர, எழுத்து மூலமான ஆவணம் ஒன்றை சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகர் தனது முடிவை இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!