பாதுகாப்பு அமைச்சுக்கு 1124 கோடி ரூபா!

2019 ஆம் ஆண்டின் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலுமான முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையை நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். இதுகுறித்து விவாதம் இடம்பெற்றதுடன் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதுடன் 102 வாக்குகளை பெற்று 96 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இந்த இடைக்கால கணக்கறிக்கையில், அடுத்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக 1765 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சேவைகளுக்காக 790 பில்லியன் ரூபாவும், திரட்டு நிதியத்துக்காக 970 பில்லின் ரூபாவும், முற்பணங்களுக்காக 5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் 990 பில்லியன் கடன் பெறவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

முதல் காலாண்டுக்காக ஒதுக்கப்பட்ட 1765,523,826,000 ரூபா நிதியில், பாதுகாப்பு அமைச்சுக்காக 1124 கோடி 63 இலட்சடத்து 55 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி செயலகத்துக்கு 439 கோடியே 62 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும், பிரதமர் அலுவலகத்துக்கு 50 கோடியே 39 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!