கடைசி மூச்சை இழுக்கும் நிலையில் சுதந்திரக்கட்சி!!

மகிந்த ராஜ­பக்­ச­வின் அர­சில் சுகா­தார அமைச்­ச­ராக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன, 2015ஆம் ஆண்­டின் அரச தலை­வர் தேர்­த­லுக்­கான கட்­சி­க­ளது வேட்­பா­ளர் தெரி­வின் இறு­திக் கட்­டம் வரை­யில் மெள­னம் காத்து, 2014 ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 20 ஆம் திக­தி­யன்று இரவு உண­வின் போது கூட, மகிந்த ராஜ பக்­ச­வு­டன் இணைந்து முட்டை அப்­பம் சாப்­பிட்டு விட்டு, மறு­நா­ளான நவம்­பர் 21 ஆம் நாள் இலங்கை அர­சி­யல் வர­லாற்­றில் அது­வரை எவ­ருமே எதிர்­பா­ராத தொரு பெரிய அதிர்ச்­சியை, இந்த நாட்­டின் பொது மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

2015 ஆம் ஆண்டு அரச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லில் மகிந்­த­வுக்கு எதி­ரா­கப் பொது வேட்­பா­ளா­ரா­கத் தாம் களம் இறங்க ஒப்­புக்­கொண்­டுள்­ள­தா­கத் தெரி­வித்து, பர­ப­ரப்பை ஏற் ப­டுத்தி வைத்­தார். அன்­று­தான் சுதந்­திர கட்­சி­யின் சரி­வும், பிள­வும் ஆரம்­பித்­தது. அதுவே காலப்போக்கில் பெரும் விரி­ச­லாக உரு­வெ­டுத்து முழு அரச இயந்­தி­ரத்­தையே ஆட்­டம் காண வைக்­கத் தொடங்­கி­யது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­ய­க­வால் 1951ஆம் ஆண்­டில் ஆரம்­பிக்­கப்­பட்ட சிறி­லங்கா சுதந்திரக் கட்சி, அது உரு­ வான காலத்­தி­லி­ருந்து, இலங்­கை­யின் மாபெ­ரும் இரண்டு அர­ சி­யற் கட்­சி­க­ளில் ஒன்­றாகத் திகழ்ந்து வந்­துள்­ளது. அது எந்­த­வொரு தேர்­த­லி­லும் தனித்­துப் போட்­டி­யி­டா­விட்­டா­லும், அர­சு­களை அமைப்­ப­தில் பெரும் பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்­ளது.

ஆனால் தற்­போ­துள்ள அர­சி­யல் சூழ்­நி­லை­யைப் பார்க்­கும் போது, சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஆயுள் இன்­னும் எவ்­வ­ளவு காலத்­திற்கு நீடிக்­கப் போகி­றது என்­பது கேள்­விக்­கு­றி­யா­க­வுள்­ளது.

அரச தலை­வ­ரது செயற்­பா­டு­க­ளின் ஆரம்­பம்

2015 ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் வெற்றி பெற்ற மைத்­தி­ரி­பால சிறிசேன செய்த முதல் வேலை, சுதந்­தி­ரக்­கட்சி­ யில் தனது பிடியை இறுக்கி, கட்­சி­யின் தலை­வர் பத­வியை தமது கைவ­சப்­ப­டுத்த முயன்­றமை ­தான். ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் பெரும் பாலான உறுப்­பி­னர்­கள் மைத்­தி­ரி­பா­லவை ஒரு தேசத்துரோகி­யென­வும், சுதந்­தி­ரக்­கட்­சியை காட்­டிக் கொடுத் த­வர் என­வுமே கரு­தி­னார்­கள்.

ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் பெரும்­பான்­மை­யா­ன­வர்­கள் சுதந்­தி­ரக் கட்­சி­யி­னரே. அரச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லின் பின்­னர் மகிந்த தரப்­பி­ன­ரின் பலம் பெருகி வரு­வதை உணர்ந்த மைத்­திரி, சுதந்­தி­ரக் கட்­சிக்­குள் தனது அதி­கா­ரத்தை உறுதிப்­ப­டுத்­திக் கொள்­வ­து­தான் தனது எதிர்­கால அர­சி­யல் இருப்­புக்கு வழிவகுக்­கு­மென உணர்ந் தார், அதனை நோக்­கியே சுதந்­தி­ரக் கட்­சி­யில் தனது இருப்பை உறு­திப்­ப­டுத்­தும் விதத்­தில் காய் நகர்த்­திய மைத்­திரி கடும் போராட் டத்துக்குப் பின்­னர், மகிந்­தவை அடி பணியவைத்து, சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வர் பத­வி­யைத் தம் வசப்­ப­டுத்­திக் கொண்­டார்.

ஆயி­னும் 2015 ஆம் ஆண்­டின் பொதுத் தேர்­த­லின் போது, ஐக் கிய தேசியக் கட்­சியை விட குறிப்பிட்ட அள­வி­லான நாடா­ளு­மன்ற ஆச­னங்­கள் குறை­ வா­கவே சுதந்­தி­ ரக்­கட்­சி­யால் கைப்­பற்ற முடிந்­தது. ஆயி­னும் தனித்து ஒரு அரசை நிறு­வு­ வ­தற்­கான பெரும் பான்மை ஆச­னங்­க­ளான 113 ஆச­னங்க­ளை எந்தவொரு கட்சியினாலும் பெறமுடி­யா­மல் போகவே ஒரு கூட்டு அரசு அமைப்­பது அவ­சி­ய­மா­ன­தொன்­றாக ஆனது.

சுதந்­திர கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­க­ளது கூற்­றுப்­படி, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறிசே­ன­தான், கட்­சி­யின் இந்த மூத்த உறுப்­பி­னர்­களை, ஐக்­கிய தேசிய கட்­சி­யு­டன் இணைந்து ஒரு கூட்டு அரசை நிறு­வும்­படி அழைப்பு விடுத்­துள்­ளார். ஆயி­னும் ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக்­கட்­சி­யின் ஒரு குழு­வி­னர், மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யில் எதிர்க்கட்சி வரி­சை­யில் செயற்­ப­டவே விரும்­பி­னர். இது சுதந்­தி­ரக்­கட்­சிக்­குள் நிலவிய உள்­ள­கப் பிள­வினை மேலும் விரி­வாக்­கி­யது.

அர­சுக்­குள் முரண்­பாட்டு நிலை

கூட்டு அரசை உரு­வாக்­கிய போதி­லும், அதில் இணைந்த இவ்­வி­ரண்டு கட்­சி­க­ளும் கொள்­கை­க­ளில் எதி­ரும், புதி­ரு­மா­க­வே­ இ­ருந்­தன. ஐக்­கிய தேசி­யக்­கட்சி தாராள பொரு­ளா­தாரக் கொள்­கை­யை­யும், சுதந்­திரக்­கட்சி ஜன­நா­யக சோச­லிச தேசிய சித்­தாந்­தத்­தை­யும், பின்­பற்­றிய கார­ணத்­தால் பிரச்­சினை என்று ஒன்று உரு­வா­கும் போது, இத்­த­கைய முரண்­பா­டு­ கள் தலைத்­தூக்­கு­வ­தால், தலைமை அமைச்­சர் எடுக்­கும் முடி­வு­க­ளுக்­கு எதி­ராக அரச தலை­வர் செயல்­ப­டு­வது நாடா­ளு­மன்­றத்­தில் சாதா­ர­ண­மாக நடக்­கும் நிகழ்ச்­சி­ க­ளா­கி­யி­ருந்­தன. இது மகிந்த தரப்­பி­ன­ருக்கு, அர­சின் உறுதியற்ற தன்­மையை மக்­க­ளுக்கு வெளிச்­சம் போட்­டுக்­காட்­டு­வ­தற்­கான வாய்ப்­பை வழங்­கி­யது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்

2018ஆம் ஆண்டில் நடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் முடி­வு­கள், மகிந்­த ­ராஜபக்­ச­வின் தலை­மை­யில் புதி­தாக உரு­வான பொது மக்­கள் முன்­னணி என்ற கட்­சி­யின், பிர­மாண்­ட­மான வளர்ச்­சியை அர­சி­யல் வாதி­க­ளுக்கு பறை சாற்றி அனை­வ­ரை­யும் திரும்­பிப் பார்க்­கும் படி செய்­தது. 231 உள்­ளூாட்சி சபை­க­ளின் அதிகாரத்ைத அந்தப் பொதுமக்­கள் முன்­னணி கைப்­பற்­றிக்கொள்ள, சுதந்­தி­ரக்­கட்சி 7உள்­ளூ­ராட்சி சபை­களை மட்­டுமே கைப்­பற்­றி­யது.

இது கூட்டு அர­சி­னுள் பெரும் பிர­ள யத்தை உரு­வாக்­கி­யது. ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னர் கட்­சிக்குள் மறு சீர­மைப்பு அவ­சி­யம் என ஒருபுறம் வற்­பு­றுத்த, மறு­பு­றம், சுதந்­திரக் கட்­சி­யி­னர் அரசை விட்டு வெளி­யேற வேண்­டு­ மென மல்­லுக்கு நிற்க, அர­ச­த­லை­வ­ரும் அவ­ரு­டைய ஆத­ர­வா­ளர்­க­ளான சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளும், தலைமை அமைச்­சர் தமது பத­வியைவிட்டு விலக வேண்­டு­மென்று வற்­பு­றுத்த ஆரம்­பித்­த­னர்.

இவற்­றின் மத்­தி­யில் மகிந்­த­வின் தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யி­னால் தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத்­தீர்­மா­னம் நாடா­ளு­மன்­றத்­தில் முன் வைக்­கப்­பட்­டது.

தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லா
தீர்­மா­னம்

நாட்­டில் கடை­சி­யாக நடந்த கண்டி இனக் கல­வ­ரத்­தைத் தலைமை அமைச்­சர் கட்­டுப்­ப­டுத்­தத் தவ­றி­விட்­டார் என­வும், பிணை­முறி மோச­டி­யு­டன் அவர் தொடர்­புள்­ள­வர் என்ற கார­ணத்­து­ட­னும், இன்­னும் பல்­வேறு கார­ணங்­க­ளு­டன் மொத்­த­மாக 14 குற்­றச்­சாட் டுக்­களை முன்­வைத்து கூட்டு எதி­ரணி, தலைமை அமைச்­சர் ரணி­லுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணையை முன்­வைத்­தது.

இந்தக் கால கட்­டத்­தில், சுசில் பிரேம ஜயந்த, லக்ஷ்­மன் யாப்பா போன்ற சுதந்­திர கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­கள் தலைமை அமைச்­ச­ரை­யும், ஐ.தே.கட்­சி­யின் அமைச்­சர்­க­ளை­யும் குறை கூறி­ய­து­ டன், தங்­க­ளு­டைய கொள்கை நிலைப்­பா­டு ­க­ளுக்கு அமைச்­ச­ரவை எந்த முக்­கி­யத்துவ­ மும் வழங்­கு­வ­தில்லை என்­ப­தை­யும் வெளிப் படுத்­தி­யி­ருந்­த­னர். நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரே­ரணை வாக்­கெ­டுப்­பின் பின்­னர் சுதந்தி­ரக் கட்சி மூன்று பிரி­வு­க­ளாகப் பிரிந்­துள்­ளது.

சுதந்­தி­ர­கட்­சி­யின் 16 அங்­கத்­த­வர்­கள் நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­து­டன், தமது அமைச்­சுப்­ப­த­வி­க­ளை­யும் துறந்­துள்­ள­னர். இப்­போது சுதந்­தி­ரக்­கட்­சி­யின் ஒரு பிரிவு அர­சுக்­குச் சார்­பா­க­வும், மற்­றொரு பிரிவு அர­சி­லி­ருந்து கொண்டே அர­சுக்கு எதி­ரா­க­வும், மூன்­றா­வது பிரிவு கூட்டு எதி­ர­ணி­யு­டன் இணைந்­தும் இயங்­கு­கின்­றன.

இலங்கை அர­சி­யல் அரங்­கின் இன்­றைய நிலை

அடுத்த நாடா­ளு­மன்ற அமர்வு ஏப்­ரல் 19 திகதி நடை பெறும் போது எதிர்க்­கட்­சி­யில் அம­ரு­வ­தென மேற்­கு­றிப்­பிட்ட 16 அங்­கத்­த­வர்­க­ளும் முடிவு செய்­தி­ருந்த போதி­லும், அரச தலை­வர் ஏப்­ரல் 12 ஆம் திகதி வரை நாடா­ளு­மன்­றத்­தின் 8ஆவது கூட்­டத் தொ­டரை, நீடித்­தி­ருந்­தார். இதன்­படி நாடா­ளு­மன்ற இரண்­டா­வது கூட்­டத்­தொ­ட­ ரின் முத­லா­வது அமர்வு எதிர்­வ­ரும் மே மாதம் 8ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ளது.அரச தலை­வர் நாடு திரும்­பி­ய­வு­டன் சர்ச்­சைக்­கு­ரிய 16 முன்­னாள் அமைச்­சர்­க­ளு­டன் பேச்­சுக்­களை நடத்­த­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் பொதுச் செய­லா­ளர் மகிந்த அம­ர­வீர, சுதந்­தி­ரக்­கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் துமிந்த திசா­நா­யக ஆகி­யோர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­விக்­கும்­போது, அரச தலை­வர் நாடு திரும்­பி­ய­வு­டன் ஐக்­கிய தேசிய கட்­சி­யும், சுதந்­தி­ரக்­கட்­சி­யும் ஒரு புதிய ஒப்­பந்­தத்­து­டன், புதிய அமைச்­ச­ர­வை­யில் செயற்­ப­ட­வுள்­ள­தாக கூறி­னர்.

இந்த இரு­வ­ரின் கருத்­துப்­படி அடுத்த தேர்­தல்­வரை இந்­தக் கூட்டு அர­சைத் தொடர்ந்து முன்­னெ ­டுப்­பதே அரச தலை­வ­ரின் நோக்­கம் எனக் கரு­தும் நிலை­யில், சர்ச்­சைக்­கு­ரிய அந்த 16 பேரும், அர­ச­மைப்பு யாப்பு விதி­க­ளின்­படி, 2015 ம் ஆண்­டுத் தேர்­த­லில் சுதந்­தி­ரக்­கட்சி போட்­டி­யி­டாத கார­ணத்­தால், அரச தலை­வ­ரின் அத்­த­கைய புதிய ஒப்­பந்­த­மெ­து­வும் செல்­லு­ப­டி­யா­காது என்று கூறி­யுள்­ள­னர்.

அத்­து­டன் சுதந்­தி­ரக்­கட்­சி­யின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­கள் மகிந்த அம­ர­வீ­ர­வை­யும் துமிந்த திசா­நா­ய­க­வை­யும், சுதந்­தி­ரக் கட்­சி­யில் அவர்­கள் வகிக்­கும் பத­வி­க­ளி­லி­ருந்து வெளி­யேற்றி கட்­சி­யைக் காப்­பாற்ற வேண்­டு­மென கருத்­துத் தெரி­வித்­தார்­கள். இந்த நிலை­யைப்­பார்க்­கும் பொழுது, தலைமை அமைச்­சர் ரணி­லின் மீதான நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரே­ரணை வாக்­கெ­டுப்­பின் பின்­னர், ஐக்­கிய தேசிய கட்சி ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­கி­றது; ஆனால், சுதந்­தி­ரக் கட்­சியோ மென்­மே­லும் நிலை தடு­மா­றிக்­கொண்டு செல்­கி­றது எனக் கருத வேண்­டி­யுள்­ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!