இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே போராடி வருகின்றது – மாவை

??????????????????????????????????????????????????????????
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாகவே செயற்பட்டு நீண்ட காலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தொடர்ந்தும் போராடி வருகின்றது எத்தகைய தடைகள் வந்தாலும் எமது இந்தப் போராட்டம் ஓயாது என இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரும் கூட்டமைப்பு உறுப்பினருமான மாவை.சோனதிராசா தெரிவித்தார்.

சுவிஸ் செந்தமிழ்ச்சோலையின் நிறுவன அனுசரணையுடன் இலங்கைத்தமிழசுக் கட்சியின் ஏற்பாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு கட்சி அலுவலத்தில் நேற்று நடைபெற்றபோது அங்கு உரையாற்றுகையிலேயே இவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்போதைய அரசியல் தொடர்பில் பலரும் பலகருத்துக்களை முன்வைக்கலாம் அது ஜனநாய ரீதியானதே நாங்களும் ஜனநாயக ரீதியில் தான் செய்பட்டுவருகின்றோம் கடந்த மாதங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் யாவரும் அறிந்தததே இது திருட்டுத் தனமான முறையற்ற விதத்தில் பிரதமரை இல்லாது ஆக்கியது அமைச்சரவையை இல்லாதாக்கிய செயற்பாடுகள் அரசியல் அமைப்புக்கு முரணாவே இடம்பெற்றுள்ளது. இது அனைவராலும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதற்காகவே நீதிமன்றம் சென்றமையிலனால் நீதிமன்றம் அதற்கான தீர்ப்பை வழங்கி நீதியை நிலைநாட்டியது.

இந்த நீதிமன்றத் தீர்ப்பு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு அமைவாக தற்போது புதிய அரசியல் தீர்வு இடம்பெற்றது. நாங்கள் எமது மக்களுக்கு என்ன தேவையோ அதனை முன்நிறுத்தி நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். சிலர் எமது செயற்பாட்டை பார்த்து ஒரு கட்சிக்கு சார்ந்தாக நடப்பதாகக் கூச்சல் இடுகின்றார்கள்.

ஆனால் நாங்கள் ஜனநாயக ரீதியாக செயற்பட்டு ஜனாநாயகத்தை நிலைநாட்டியுள்ளோம். இதேபோல்தான் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள அரசியல் தீர்வை கண்டடைவோம் சம நேரத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் பகுதிகளை புனரமைப்பதும் பெண் தலைமைத்துவம் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதும் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பாகவும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றோம்.

இத்தகைய செயற்பாடுகளுக்கு உறுதுணையாக சர்வேத சமூகமும் எங்களுடன் நிற்கின்றது. இந்தத்தருனத்தை நாங்கள் முறையாக பயன்படுத்தி எமது மக்களுக்காக தொடர்தும் செயற்பட்டு வருவோம் என்றார்.”

குறித்த நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி பிரதேச உறுப்பினர் கலையமுதன் தமிழரசுக்கட்சியின்நிர்வாக செயலாளர் எஸ். குலநாயகம் மாவட்டகிளைத்தலைவர் கனகசபாபதி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!