மூடப்பட்ட ஜேர்மனியின் கடைசி நிலக்கரிச் சுரங்கம்: – கனத்த இதயத்துடன் வெளியேறிய தொழிலாளர்கள்

?????????????????????????????????????????????????????????
கண்களில் நிறைந்துள்ள கண்ணீரை மறைத்துக் கொண்டு, கனத்த இதயத்துடன் கையில் ஒரு பெரிய நிலக்கரித் துண்டுடன் ஜேர்மனியின் Prosper-Haniel சுரங்கத்திலிருந்து வெளியேறிய அந்த ஏழு தொழிலாளர்களும், அதை தங்கள் நாட்டு அதிபரிடம் ஒப்படைக்கின்றனர்.

குட்லக் என்று கூறியவாறு அவர்கள் கொடுக்கும் அந்த ஒரு துண்டு நிலக்கரியை பெற்றுக் கொண்ட ஜேர்மன் அதிபர் Frank-Walter Steinmeier, ஜேர்மன் வரலாற்றின் ஒரு துண்டு இங்கு முடிவுக்கு வருகிறது என்கிறார்.என்ன நடக்கிறது அங்கு, ஏன் அந்த தொழிலாளர்கள் கண்களில் கண்ணீர், ஜேர்மன் அதிபர் சொல்வதன் பொருள் என்ன?

பசுமை இல்ல வாயு வெளியாவதை குறைக்க விரும்பும் ஜேர்மனி, ஜேர்மனியின் மின்சாரத் தேவையின் ஐந்தில் இரண்டு பங்கு நிலக்கரியை எரிப்பதிலிருந்தே கிடைக்கும் நிலையில், அதை தொடர்ந்தால், அது எதிர்பார்க்கும் விளைவுகள் கிடைக்காது என்று அறிவியலாளர்கள் கூறியதை அடுத்து, ஜேர்மனியிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வந்தனஅத்துடன் சுரங்கங்களை நிர்வகிக்க ஏராளமான செலவும் ஆனது.அதன் அடிப்படையில் ஜேர்மனியின் கடைசி நிலக்கரிச் சுரங்கமான Prosper-Hanielசுரங்கமும் தற்போது மூடப்பட்டுள்ளது.

அதிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட கடைசி துண்டு நிலக்கரியைத்தான் தொழிலாளர்கள் ஜேர்மன் அதிபரிடம் ஒப்படைத்தனர்.பழுப்பு நிலக்கரி சுரங்கங்களும் மூடப்படுவதன் ஒரு படியாகவே இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.சுரங்கப் பணிகளின்போது உயிரை தியாகம் செய்த தங்கள் சக தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தி தங்கள் கடைசி நாள் பணியை சுரங்கத் தொழிலாளர்கள் முடித்துக் கொண்டனர்.அதே நாள் இரவில், செக் குடியரசில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த ஒரு வெடி விபத்தில், 13 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி வெளியானது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!