கருப்பினத்தவரின் தலை முடியை வெட்டியெறிந்த நடுவர்:-கோபத்தை தூண்டிய இனவெறுப்பு

கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு மல்யுத்த வீரரின் முடியை பலர் முன்னிலையில் வெட்டி அவமதித்த நடுவருக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அவர் ஏற்கனவே இனவெறுப்பை வெளிக்காட்டும் வகையில் பேசியுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டி ஒன்றில் பங்கேற்க இருந்த Andrew Johnson என்னும் கருப்பின வீரரை அவமதிக்கும் வகையில் பலர் முன்னிலையில் அவரது தலை முடியை Alan Maloney என்னும் நடுவரின் உத்தரவின் பேரில் ஒரு பெண் வெட்டும் வீடியோ வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டு விதிகளின்படி, தலைவிரி கோலமாக இருக்கும் முடி அனுமதிக்கப்படாது.ஆனால் Andrew Johnsonஇன் முடி அவ்வாறு இல்லாமலிருந்தும் அதை வெட்டக் கூறியது சுத்த இனவெறி என நெட்டிசன்கள் கொதிக்கின்றனர்.ஏற்கனவே Alan Maloney கூட்டம் ஒன்றின்போது, சக ஆப்பிரிக்க அமெரிக்க நடுவரை நீக்ரோ என்று அழைத்ததற்காக ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் Andrew Johnson சர்வ சாதாரணமாக போட்டியில் வெற்றிபெற, வேண்டாவெறுப்பாக அவரது கையை பிடித்து உயர்த்தி வெற்றி என்று Alan Maloney காட்டுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளதைக் காணலாம்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!