வெள்ளத்தில் மூழ்கியது கிளிநொச்சி – 5000 பேர் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றிரவு கொட்டிய பெருமழையை அடுத்து, ஏற்பட்ட வெள்ளத்தினால், 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின், மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 701 குடும்பங்களை சேர்ந்த 2550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு 7 பாதுகாப்பான அமைவிடங்களில் 229 குடும்பங்களை சேர்ந்த 858 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 629 குடும்பங்களை சேர்ந்த 2026 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 7 பாதுகாப்பான அமைவிடங்களில் 341 குடும்பங்களை சேர்ந்த 1119 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 17 குடும்பங்களை சேர்ந்த 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பாதுகாப்பான அமைவிடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சீரற்ற காலநிலையால் இரண்டு வீடுகள் முழுமையாகவும், நான்கு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்க அரசாங்கம் நடவடி்க்கை எடுத்துள்ள அதேவேளை, பொது அமைப்புகள், தனிநபர்களும் உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!