மகிந்த கோத்தாவிற்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டு

மகிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங்களில் இனப்படுகொலை குற்றச்சாட்டினை சுமத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என கோத்தபாய ராஜபக்சவின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மிலிந்த ராஜபக்ச தனது டுவிட்டரில் இதனை பதிவு செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி முன்னாள் பாதுகாப்பு செயலாளரிற்கு எதிராக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த புலம்பெயர் புலிகளின் சட்டத்தரணிகள் இனப்படுகொலை குற்றச்சாட்டினை நீதிமன்றத்தில் சுமத்தவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்

சிவானி தியாகராஜா என்ற சட்டத்தரணியே இதற்கு தலைமை தாங்குகின்றார் என மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா உட்பட யுத்தத்தின் இறுதி தருணங்களில் முப்படைகளின் தளபதிகளாக பணியாற்றியவர்களிற்கு எதிராகவும் இனப்படுகொலை குற்றச்சாட்டை சுமத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன அவர் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!