போதைப்பொருட்களை விருந்தினர்களிற்கு பரிசளித்தார் ஹரியின் மனைவி

பிரிட்டிஸ் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கிலே தனது முதல் திருமணத்தில் கலந்துகொண்டவர்களிற்கு அன்பளிப்பாக போதைப்பொருட்களை வழங்கியதாக தனது நண்பிகளிற்கு தெரிவித்தார் என மின்னஞ்சல்களை அடிப்படையாக வைத்து பிரிட்டனின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஹரியின் மனைவி டிரெவர் என்ஜெல்சன் என்பவரை ஏற்கனவே மணமுடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமணம் ஜமைக்காவில் இடம்பெற்றது

இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்பவர்களிற்கு மரியுவானாவை வழங்கப்போவதாக ஹரியின் மனைவி தெரிவித்தார் என்பதை தெரிவிக்கும் மின்னஞ்சல்களை பார்வையிட்டுள்ளதாக சன் தெரிவித்துள்ளது.

அவரின் நண்பியொருவர் போதைப்பொருட்களை வழங்குவதற்காக விசேட பைகளை வாங்குமாறு ஆலோசனை தெரிவித்தவேளை அவற்றை நான் ஏற்கனவே வாங்கிவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார் என சன் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட மின்னஞ்சல்கள் மூலம் அவர் போதைப்பொருட்களை எவ்வாறு பொதியிட்டு திருமண விருந்தில் கலந்துகொண்டவர்களிற்கான பரிசுப்பொதிகளில் சேர்த்தார் என்பதும் தெரியவந்துள்ளது என சன் குறிப்பிட்டுள்ளது

மேகனும் அவரது கணவரும் ஹோட்டல் ஊழியர் மூலம் போதைப்பொருட்களை கொள்வளவு செய்துள்ளனர் என சன் தெரிவித்துள்ளது.

சில மாதங்களிற்கு முன்னர் மேகனின் தந்தையும் இதனை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2011 திருமணத்தின் போது விருந்தினர்களிற்கு போதைப்பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன என அவர் தெரிவித்திருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!