எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் பேட்டி – அரசு ரத்த வங்கி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிறந்த முறையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஏ.ஆர்.டி. மருந்துகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. வயிற்றில் உள்ள குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவாத வகையில் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன. ரத்த வங்கியில் ஏற்பட்ட தவறு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு எங்கு நடந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்ற சம்பவங்கள் மறைக்கப்படுவதாக கூறுவது தவறானது. அரசு ரத்த வங்கிகள் குறித்து வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இது போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிச்சயம் நடக்காது. அரசு ரத்த வங்கிகளுக்கு வரும் ரத்தம் முறையாக பரிசோதிக்கப்படுகிறது. தினமும் ஏராளமான நோயாளிகளுக்கு ரத்த வங்கிகள் மூலம்தான் ரத்தம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!