அனைத்து ஆளுனர்களையும் பதவி விலக உத்தரவு

அனைத்து மாகாணங்களினதும் ஆளுனர்களை உடனடியாக பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

ஒன்பது மாகாணங்களினதும் ஆளுனர்களுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இது தொடர்பான அறிவுறுத்தல வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று – டிசெம்பர் 31ஆம் நாளுக்கு முன்னதாக, பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பிக்குமாறு ஆளுனர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தாய்லாந்துக்கு ஒரு வாரகால தனிப்பட்ட விடுமுறைப் பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் நாடு திரும்பவுள்ளார்.

இதனை அடுத்து. புதிய ஆளுனர் நியமனம் உள்ளிட்ட சில அரசியல் முடிவுகளை எடுப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!