ட்ரம்புக்கு புட்டின் அவசரக் கடிதம்!

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அமெரிக்காவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராகவிருப்பதாக புட்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு சர்வதேச பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிபடுத்துவதற்கான முக்கிய காரணி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிரிய அதிபர் பாஷர் அல் ஆசாதுக்கு புதின் எழுதியுள்ள கடிதத்தில், பயங்கரவாதத்தை எதிர்க்கவும், இறையாண்மையைக் கட்டிக்காக்கவும் சிரிய அரசுக்கும், மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் ரஷ்யா தொடர்ந்து செய்யும் என உறுதியளித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!