இராணுவத் தலைமை அதிகாரிக்கு 10 மேஜர் ஜெனரல்களின் பெயர்கள் பரிந்துரை

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு 10 மூத்த மேஜர் ஜெனரல்களில் பெயர்களை, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பரிந்துரைத்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ ஓய்வுபெற்றதை அடுத்து, அந்தப் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிப்பதற்கு, தகுகுதியான அதிகாரிகளின் பட்டியல் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, நேற்று இராணுவத் தளபதி அனுப்பியுள்ளார்.

10 மூத்த மேஜர் ஜெனரல்களைக் கொண்ட இந்தப் பட்டியலில், மேஜர் ஜெனரல்கள் சவேந்திர சில்வா, சத்யபிரிய லியனகே, அஜித் காரியகரவண, ருவான் குலதுங்க, ருக்மல் டயஸ், தர்ஷண ஹெற்றியாராச்சி, குமுது பெரேரா ஆகியோரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!