ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்கிய டிஐஜி உடுகம்பொல மரணம்

வடக்கிலும் தெற்கிலும், ஏராளமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய, சிறிலங்காவின் முன்னாள் மூத்த பிரதி காவல்துறை அதிபர் பிறேமதாச உடுகம்பொல நேற்று மரணமானார்.

யாழ்ப்பாணத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த போது, வடக்கில் விடுதலைப் புலிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த உடுகம்பொல, 1989இல், தெற்கில் ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதில் முக்கிய பங்காற்றினார்.

உடுகம்பொலவின் கீழ் உருவாக்கப்பட்ட சிறப்பு காவல்துறைக் குழு ஜேவிபி உறுப்பினர்களை வேட்டையாடுவதிலும், கிளர்ச்சியை ஒடுக்குவதிலும் தீவிர பங்காற்றியிருந்தது.

இதன்போது, ஈவிரக்கமற்ற சித்திரவதைகளையும், மோசமான மனித உரிமை மீறல்களையும் புரிந்ததாக உடுகம்பொல மீதும் சிறிலங்கா காவல்துறை மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எனினும், இவருக்கு எதிராக எந்த நீதி விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

40 ஆண்டுகாலம் சிறிலங்கா காவல்துறையில் பணியாற்றிய இவர், தனது 83 ஆவது வயதில் நேற்று மரணமானார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!