இடிபாட்டுக்குள் சிக்கிய குழந்தை ; 35 மணி நேரத்தின் பின் உயிருடன் மீட்பு

ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து வீழந்ததில் 07 பேர் உயிரிழந்த நிலையில், 35 மணி நேரமாக அந்த இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த குழந்தையொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

தென் ரஷ்ய நகரான மக்னிடோ கொர்ஸ்க்கிலுள்ள குடியிருப்புக் கட்டமொன்றில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற எரிவாயு வெடித்தமையினாலேயே குறித்த குடியிருப்பு இடிந்து வீழ்ந்துள்ளது.

செல்யாகின்ஸ்க் பிராந்தியத்திலள்ள குடியிருப்புக் கட்டடத்தில் இடம்பெற்ற மேற்படி எரிவாயு வெடிப்பு அனர்த்தத்தையடுத்து அந்தக் கட்டத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் 48 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மீட்பு பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். இதில் பலர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 36 பேர் இடிபாட்டுக்குள் சிக்குண்டு காணாமல் போயுள்ளனர்.

இந் நிலையில் 35 மணி நேரமாக அந்த இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த 11 மாத ஆண் குழந்தையொன்றை தலையில் பலத்த காயத்துடன் மீட்பு படையினர் உயிருடன் மீட்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!