ஈரான் நிலநடுக்கத்தால் 75 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

ஈரான், ஜர்மான்ஷா மாகாணத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட 5.9 ரிக்கெடர் அளவிலான நிலநடுக்கம் காரணாக 75 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குறித்த நிலநடுக்கத்தினால் ஜிலாங்கர்ப் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெறியேறினர்.

மலைப் பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறைகளினால் போக்குவரத்தும் பாதிப்படைந்ததுடன் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இந்த நில நடுக்கத்தக்கு பிறகு தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்தது. அவை 3 முதல் 4.8 ரிக்டெர் ஆக பதிவானது.

நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள், கால்நடை பண்ணைகள் இடிந்து சேதம் அடைந்தன. அதில் 75 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்னர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!