மஹிந்த, கோத்தாவை சிறைக்குள் தள்ள முயற்சி!

எதிர் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு சதியொன்று இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ‘எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் சிறைப்படுத்துவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மகிந்த ராஜபக்சவுக்கும், கோத்தபாய ராஜபக்சவுக்கும் எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்ய, சர்வதேச ரீதியில் செயற்படும் புலம்பெயர் தமிழீழ அரசாங்கம் எனும் அமைப்பின் உருத்திரகுமார் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த வழக்கைத் தாக்கல் செய்யும் பொறுப்பு சிவானி தியாகராஜாவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் மூலம் அறிந்து கொண்டோம்.

இதேவேளை, மகிந்த ராஜபக்சவை எதிர்க் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான சதியொன்று இடம்பெறுகிறது என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!