போரில் மனித உரிமை மீறல்கள் நடப்பது சாதாரணம்!

?????????????????????????????????????????????????????????
போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவது சாதாரண ஒரு விடயம் தான் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக பெர்னான்டோ தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“நாம் அமெரிக்காவுக்கு பயங்தோ சர்வதேசத்துக்கு பயந்தோ வெளிநாட்டுக் கொள்கைகளை தயாரிக்கவில்லை. நாம் 30 வருடங்கள் யுத்தத்தினால் அவதியுற்றோம். இன்று மனித உரிமை தொடர்பில் பேசும் எந்தவொரு நாடும் அன்று எமக்கு உதவவில்லை. உலகிலேயே பயங்கரமான அமைப்புடன் தான் நாம் போரிட்டோம். இவ்வாறான அமைப்புடன் போரிடும்போது, மனித உரிமை மீறப்படும். மனித உரிமை மீறப்படாமல், இவ்வாறான ஒரு பயங்கரவாத அமைப்புடன் எம்மால் போரிட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மனித உரிமைகள் தொடர்பில் அதிகமாகப் பேசும் அரசாங்கம், உலகிலேயே அதிகமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அமெரிக்காவுடன் தான் இணைந்து செயற்படுகிறது.” என கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!