அவுஸ்திரேலியாவிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களிற்கு மர்மப்பொருள்

அவுஸ்திரேலியாவிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களிற்கு சந்கேதத்திற்கிடமான பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெல்பேர்ன் கான்பெராவில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்களிற்கு இனந்தெரியாதவர்கள் மர்ம பொருட்களை அனுப்பியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா இந்தியா பிரான்ஸ் பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளின் தூதரகங்களில் அவசரநிலை பணியாளர்கள் காணப்படும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன

தூதரகத்திற்கு வந்த கடிதத்தை திறந்து பார்த்தவேளை அதற்குள் அஸ்பெஸ்டோஸ் போன்ற பொருட்கள் காணப்பட்டன என பாக்கிஸ்தான் தூதரக பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனக்கு என்ன நடக்குமென நான் அஞ்சமடைந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். தனது கைகளை நன்றாக கழுவுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்

தூதரகங்களிற்கு அனுப்பப்பட்ட பொருட்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய துணை தூதரகத்தின் 40 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர், அவர்களை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவேண்டாம் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!