தமிழ் மக்கள் பேரவையின் எதிர்காலம்!!

2015 ஆம் ஆண்டு தமிழ் மக் களின் ஆத­ர­வு­டன் தெற்­கில் மலர்ந்த அரசு, இனப் பி­ரச்­சி­னைக்­குத் தீர்­வாக புதிய அரசமைப்பு ஒன்றை உரு­வாக்க முனைந்­தது. இந்த முயற்­சி­யில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பும் பங்­கா­ள­ராக இணைந்து கொண்­டது.

அர­சி­யல் கட்­சி­கள் தமது அர­சி­யல் பேரங்­க­ளை­யும் அரசமைப்பு உ­ரு­வாக்க முயற்­சி­க­ளையும் ஒன்­றா­கக் கலக்க முற்­பட்­டன. புதிய அரசமைப்பில் இனப்­பி­ரச்­சி­னைத்­தீர்­வுக்கு அடிப்­ப­டை­யாக இருக்க வேண்­டிய அம்­சங்­களை முதன்­மைப்­ப­டுத்­துதல் கைவி­டப்­பட்­டது.

புதிய அரசமைப்பில் தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­கள் வழங்­கப்­ப­டு­வ­தாக தோற்­றம் ஏற்­ப­டு­மா­னால், பத­விக்கு வந்த மைத்­தி­ரி–­ர­ணில் அரசு தொடர்ந்து பத­வி­யில் இருக்க முடி­யாது என்ற அர­சி­யல் கார­ணி­கள் முதன்­மைப்­ப ­டுத்­தப்­பட்­டன.

தெற்­கில் மீண்­டும் மகிந்த பத­விக்கு வரு­வ­தைத் தடுக்க வேண்­டும் என்ற நோக்­கம் முதன்­மைப்­ப­டுத்­தப் பட்­டது. சிங்­கள இன­வா­தத் துக்குப் பயந்த நிலை­யி­லேயே அரசமைப்பு உருவாக்கல் முயற்­சி­கள் முன்­னெ­டு க்கப்­பட்­டன. இந்த அடிப்­ப­டை­யைப் புரிந்தோ புரி­யா­மலோ, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் இந்த முயற்­சி­க­ளில் இணங்­கிப் போகும் தன்மை காணப்­பட்டது.

திசைமாறத் தொடங்கிய புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பைப் பொறுத்­த­வ­ரை­யில், இலங்கை சுதந்­தி­ரம் அடைந்த பின்­னர் அரசமைப்பு உரு­வாக்க முயற்­சி­க­ளில் தமி­ழ­ரும் கலந்து கொள்­ளக் கிடைத்த முத­லா­வது வாய்ப்­பாக இத­னைக் கரு­தி­னர். இந்­தச் சந்­தர்ப்­பத்­தைப் பயன்­ப­டுத்தி தமிழ் மக்­க­ளின் அபி­லா­சை­களை அரச மைப்பில் இடம்­பெற வைக்க முடி­யும் என மன­தார நம்­பி­னர். இவர்­களை இந்த முயற்­சி­யில் ஈடு­ப­டு­மாறு பன்­னா­டு­க­ளது அர­சு­க­ளும் நிர்ப்­பந்­தித்­தன.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், பன்­னா­டு­க­ளது அர­சு­க­ளும் சிங்­கள இன­வா­தத்தை தெரிந்தோ தெரி­யா­மலோ, குறை­வாக மதிப்­பிட்டு விட்­ட­னர் போலும். புதிய அரசமைப்பு முயற்சி சிங்­கள இன­வா­தத்தை உசுப்பிவிட்­டது. மகிந்­த­வின் ஊழல்­க­ளைத் தாங்க முடியா­மல் அவ­ரைப் பத­வி­யில் இருந்து நீக்கி மைத்­தி­ரி–­ர­ணில் அரசைப் பத­வி­யில் அமர்த்­திய சிங்­கள மக்­கள், மீண்­டும் மகிந்­த­வின் பக்­கம் சாயத் தொடங்­கி­னர். இந்த மகிந்த பூச்­சாண்­டி­யால் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்­சி­கள் திசை­மா­றத் தொடங்­கின.

புதிய அரசமைப்பில் தமிழ் மக்­க­ளுக்கு கூட்டு ஆட்­சிக்­குச் சம­மான உரி­மை­கள் உள்­ளன என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தமிழ் மக்­க­ளுக்­குக் கூறி­யது. புதிய அரசமைப்பில் நாம் ஒற்­றை­யாட்­சியை மேலும் பலப்­ப­டுத்தி இருக்­கி­றோம் என மைத்­தி­ரி–­ர­ணில் அரசு சிங்­கள மக்­க­ளுக்­குக் கூறி­யது. தமிழ்மக்­க­ளுக்கு புலி­யின் தலை­யை­யும், சிங்­கள மக்க­ளுக்கு பூனை­யின் வாலை­யும் காட்­டும் முயற்சி வெளிப்­ப­டை­யா­கவே நடந்­தது.

இவ்­வா­றாக இரு சமூக மக் க­ளை­யும் ஏமாற்­றும் இந்த அர­சி­யல் நாட­கத்­தின் மத்­தி­யில் இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்­வாக தமி­ழர் வேண்­டு­வது என்ன என்­பதை எல்லா அர­சி­யல் கட்­சி­க­ளுக்­கும் உரத்­துச் சொல்ல வேண்­டிய தேவை எழுந்­தது. அர­சி­யல் கட்­சி­கள் ஆட்­சி­ அ­தி ­கா­ரத்­தைத் தக்க வைப்­ப­தற்கு புதிய யாப்பு முயற்­சி­யைப் பலிக்­கடா ஆக்­கிய நிலை­யில் இந்­தக் குரல் ஓர் அர­சி­யல் கட்­சி­யி­ட­மி­ருந்து வரா­மல் பொது மக்­கள் தரப்­பி­லி­ருந்து வர­வேண்­டும் என்ற தேவை உண­ரப்­பட்­டது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­ லேயே, தமிழ் மக்­கள் பேரவை 2016 ஆம் ஆண்டு உத­ய­மா­னது. தமிழ் மக்­கள் மத்­தி­யி­லி­ருந்த அர­சி­யல் ஆர்­வ­லர்­கள், வட­மா­காண முத­ல­மைச்­சர் சீ.வி.விக்­னேஸ்­வ­ர­னு­டன் சேர்ந்து இதனை ஆரம்­பித்­த­னர். எந்த ஒரு கட்­டத்­தி­லும் இது ஓர் அர­சி­யல் கட்­சி­யாக மாற்­ற­ம­டை­யாது என்ற கோட்­பாட்­டு­டன் இது ஆரம்பிக்­கப்­பட்­டது.

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, ஈழ மக்­கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி ( சுரேஸ் அணி ), தமிழ் ஈழ மக்­கள் விடு­தலை இயக்­கம் ஆகிய அர­சி­யல் கட்­சி­கள் தமிழ் மக்­கள் பேர­வை­யில் இணைந்து செய­லாற்­றத் தொடங்­கின. தமி­ழ் அரசுக் கட்­சித் தலை­வர்­கள் தமிழ் மக்­கள் பேர­வை­யின் உரு­வாக்­கத்­திற்­கும் அது மேற்­கொண்ட ‘‘எழுக தமிழ்’’ போன்ற நிகழ்­வுக­ ளுக்கும் எதிர்ப்பை வௌியிட்­ட­னர் என்­பது இங்கு குறிப்­பி­டப்­பட வேண்­டும்.

தமிழ்மக்கள் பேரவையின் ‘எழுக தமிழ்’ நிகழ்வுகள்

தமிழ் மக்­கள் பேரவை ஓர் அர­சி­யல் கட்­சி­யாக இல்­லா­மல் வெகு­ ஜன அமைப்­பா­கச் செய­லாற்­றும் என்ற வகை­யில் தமி­ழர் பகு­தி­க­ளில் ஏற்­க­னவே இயங்கி வந்த தொழிற் சங்­கங்­க­ளும், சிவில் சமுக அமைப்­புக்­க­ளும் தமிழ் மக்­கள் பேர­வை­யு­டன் இணைந்து செய­லாற்ற முன்­வந்­தன. வடக்­கி­லும் பின்­னர் கிழக்­கி­லும் ‘‘எழுக தமிழ்’’ நிகழ்­வு­க­ளைப் பல­த­ரப்­பி­ன­ரின் ஒற்­று­மை­யு­டன் பேரவை வெற்­றி­க­ர­மாக நடத்­தி­யது.

இவ்­வா­றாக தமி­ழர் தரப்­பின் பல்­வேறு தரப்­புக்­க­ளை­யும் பின்­ன­ணி­க­ ளை­யும் கொண்ட வெகு­ஜன இயக்­க­மாக தமிழ் மக்­கள் பேரவை பரி­ண­மித்­தது.

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்­சி­க­ளில் தமிழர் வேண்­டு­வ­தென்ன என்­பதை அர­சி­யல் கட்­சி­க­ளுக்­கும், பன்­னா­டு­க­ளுக்­கும் வெகு­ஜ­னத்­தின் குர­லாக எடுத்­துச் சொல்­லும் வர­லாற்று முக்­கி­யத்­து­வம் மிக்க அமைப்­பாக தமிழ் மக்­கள் பேரவை தோற்­றம் பெற்­றது. இந்த அமைப்­பைத் தோற்­று­வித்த தலை­வர்­கள் ஆரம்­பத்­தில் இந்த வர­லாற்­றுக் கட­மை­யின் தார்ப்­ப­ரி­யத்தை உணர்ந்­த­வர்­களாகவே காணப்­பட்­ட­னர்.

ஆயி­னும், இந்­தத் தலை­வர்­க­ளில் முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட எல்­லோ­ரும் தமது தொழில்­சார் துறை­க­ளில் முன்­ன­ணி­யில் இருப்­ப­வர்­கள். இவர்­க­ளுக்கு ஒரு வெகு­ஜன அமைப்பை உரு­வாக்­கு­வ­தில் முன் அனு­ப­வம் இருக்­க­வில்லை. அமைப்பை உரு­வாக்­கு­வ­தற்­குச் செல­வ­ழித்த நேர­மும் குறைவு.

இத­னால் நேரம் கிடைத்­த­வர்­கள் தமது தனி­ம­னித ஆளு­மை­க­ளைப் பயன்­ப­டுத்­தி­யும், தன்­னிச்­சையாகவும் அமைப்பை உரு­வாக்­கு­வ­தில் ஈடு­பட்­ட­னர்.

இதில் நகைப்­புக்­கி­ட­மா­னது என்­ன­ வெ­னில், புதிய அரசமைப்பில் இடம்­பெற வேண்­டி­யது என்­ன­வென வலி­யு­றுத்த ஆரம்­பித்த அமைப்பு, தனது செயற்­பா­டு­களை நெறிப்­ப­டுத்த ஒரு திட்ட வரைபை உரு­வாக்­கத் தவ­றி­விட்­டது. தமிழ் மக்­கள் பேரவை ஆரம்­பித்த நாளில் இருந்து கணி­ச­மான காலம்­வரை இதற்­கென ஓர் அலு­வ­ல­கம் இருக்­க­வில்லை. இவ்­வா­றான குறை­பா­டு­கள் பல­ரா­லும் பல­முறை சுட்­டிக்­காட்­டப்பட்ட போதும், அவற்றை நிவர்த்தி செய்ய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­ட­வில்லை.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் தலைமை வெகு­ஜன அமைப்­புத் தானாக வளர்ந்து விடும் என எதிர்­பார்த்­தது. அவர்­க­ளால் போதிய நேரத்தை இதற்கு ஒதுக்க முடி­யாத நிலை­யில் அமைப்பை உரு­வாக்­கும் செயற்­பா­டு­கள் அவர்­க­ளின் ஓய்வு நேர முயற்­சி­யாக ஆகும் நிலை ஏற்­பட்­டது.

தமி­ழ். அரசுக் கட்­சி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன், கன­டா­வின் (TET) தொலைக்­காட்­சிக்கு 2018 தை மாதத்­தில் வழங்­கிய நேர்­கா­ண­லில், தமிழ் மக்­கள் பேர­வை­யின் ‘‘எழுக தமிழ்’’ போன்ற நட­ வ­டிக்­கை­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஈடு­பட முடி­யுமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘‘தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைப் பொறுத்­த­வரை அர­சுடன் இணைந்து புதிய அரச மைப்புத் தொடர்­பா­கப் பேச்­சு­க­ளில் ஈடு­ப­டும் அதே சம­யத்­தில், அரசின் போக்­குக்கு எதிர்ப்­பைக் காட்­டு­வது கடி­ன­மாக இருக்­கும் எனக் கூறி­னார். அவ்­வா­றான முயற்­சி­க­ளைக் கூட்­ட­மைப்­புச் செய்­யா­மல் ஏனைய அமைப்பு ஒன்று செய்­வதே சாத்­தி­ய­மா­ன­தாக இருக்­கும்; பய­னுள்­ள­தா­க­வும் இருக்­கும்.

அரசுடன் பேச்­சு­ மேசை­யில் அம­ரும்போது ‘‘எழுக தமிழ்’’ போன்ற நட­வ­டிக்­கை­கள் கூட்­ட­மைப்புக் கும், தமி­ழர் தரப்­பி­லி­ருந்து அழுத் தம் இருக்­கி­றது என்­பதை அரசுக்கு உணர்த்­தப் பயன்­ப­டு­கின்­றன.

எவ்­வாறு சிங்­க­ளத் தீவி­ர­வா­தி­க­ளால் தமக்கு அழுத்­தம் இருக்­கி­றதோ அவ்­வாறே தமிழ்த் தீவி­ர­வா­தி­க­ளால் கூட்­ட­மைப்­புக்­கும் அழுத்­தம் இருக்­கி­றது என்று அவர்­கள் உணர்­கி­றார்­கள். அதே­வேளை இவ்­வா­றான நிகழ்­வு­கள் தமிழ் தீவி­ர­வா­தத்­தைத் தூண்­டா­மல் பார்த்­துக் கொள்­வது அவ­சி­யம். அது சிங்­கள மக்­கள் மத்­தி­யில் இன­வா­தத்தை தூண்­டும் சக்­தி­க­ளுக்கு வாய்ப்­பா­கப் போய்­வி­டும்’’ என்­று அவர் குறிப்­பிட்­டார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்தி­ர­னின் இந்­தப் பதில், தமிழ் மக்­க­ளின் உரி­மைக்­கான போரில் தமிழ் மக்­கள் பேர­வை­யின் பங்கை மிக­வும் தௌிவா­க­வும் அழுத்­த­மா­க­வும் முன்­வைக்கிறது. அதா­வது அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு உள்ள சில கைவி­லங்­கு­கள் வெகு­ஜன அமைப்­புக்­க­ளுக்கு இல்லை என்­பதை அவ­ரது பதில் எடுத்­து­ரைக்­கி­றது.

தமிழ் மக்கள் பேரவையின் இருப்பு அவசியம்

தமிழ் மக்­கள் பேர­வை­யின் நட­ வ­டிக்­கை­களைப் பல தட­வை­கள் கடு­மை­யான கண்­டித்த சுமந்­தி­ரனே, தமிழ் மக்­கள் பேர­வை­யின் இருப்­பின் அவ­சி­யத்தை உணர்ந்து இருக்­கி­றார். ஆகவே தமிழ் மக்­கள் பேர­வை­யின் வர­லாற்­றுப் பாத்­தி­ரத்தை உணர்ந்து அத­னு­டன் சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ரும் பொறுப்­பு­ணர்­வு­டன் கட­மை­யாற்ற வேண்­டிய தரு­ணம் இது. வெறும் ஓய்வு நேர முயற்­சி­யாக இத­னைக் கரு­தா­மல், வெகு­ஜன அமைப்பை பலப்­ப­டுத்த வேண்­டிய தரு­ணம் இது.

இங்கே முக்­கி­ய­மாகக் குறிப்­பிட வேண்­டி­யது தமிழ் மக்­கள் பேரவை ஒரு மக்­கள் அமைப்பு. ஒரு மக்­கள் அமைப்புக்கு ஜன­நா­ய­கக் கட்­டு­மா­னங்­க­ளும், ஜன­நா­ய­கச் செயற்­பா­டு­க­ளும் இருப்­பது அவ­சி­யம். ஆனால் தமிழ் மக்­கள் பேர­வை­யில் எடுக்­கப்­ப­டும் தீர் மா­னங்­கள் ஒரு கட்­டுக்­கோப்­பான, நிறு­வன ரீதி­யா­கவோ ஜன­நா­யக நடை­மு­றை­க­ளுக்­கூ­டா­கவோ எடுக்­கப்­ப­டு­வ­தா­கத் தெரி­ய­வில்லை.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தலை முன்­னிட்டு தமிழ் மக்­கள் பேர­வை­யின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளான தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யும், ஈழ­மக்­கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணி­யும் இணைந்து செயற்­பட விழைந்­தன. அதற்கு மக்­கள் பேரவை பின்­னி­ ருந்து ஆத­ர­வ­ளிக்க வேண்­டு­மெ­னக் கோரிக்கை விடுத்­த­னர்.

தமிழ் மக்­க­ளின் அன்­றாட வாழ்­வி­ய­லு­டன் சம்­பந்­தப்­பட்ட இந்­தத்­தேர்­த­லில் ஒரு தலை­மையை வழங்­கக்­கூ­டிய சந்­தர்ப்­பம் தமிழ் மக்­கள் பேர­வைக்கு இருந்­தது. ஒரு நிறு­வ­னப்­ப­டுத்­தப்­பட்ட ஜன­நா­யக ரீதி­யான முடி­வெ­டுக்­கும் முறை­கள் அங்கு நிறு­வப்­ப­டா­மல் இருந்­த­தால், இறு­தி­யில் முதல்­வர் விக்­னேஸ்­வ­ர­னின் கருத்தே இறுதி முடி­வா­னது.

இத­னால் நடு­வி­லி­ருந்து பேரம் பேசக்­கூ­டிய தலைமை இல்­லா­மை­யால், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யும் ஈழ­மக்­கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணி­யும் இணைந்து செயற்­பட முடி­யா­மல் பிரிந்­தன. தமிழ் மக்­க­ளின் வாக்­கு­கள் சித­றின.

இந்த வர­லாற்று முக்­கி­யத்­து­வம் மிக்க சம­யத்­தில் தமிழ் மக்­கள் பேர­வை­யின் நிறு­வ­னப்­ப­டுத்­த­லில் இருந்த குறை­பா­டு ­கள் கார­ண­மாக, முடி­வெ­டுப்­ப­தில் ஏற்­பட்ட குழப்­பங்­க­ளால் பேர­வை­யின் செல்­வாக்­குச் சரி­யத் தொடங்­கி­யது. உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­குப் பின்­னர் நடந்த தமிழ் மக்­கள் பேர­வைக் கூட்­டத்­தி­லும் முதல்­வர் விக் னேஸ்­வ­ரன் தமது அபி­மா­னத்­துக்­கு­ரி­ய­வர்­களை அழைத்து வந்து அவர்­க­ளைப் பேர­வை­யில் இணைத்­துக் கொள்­ள­மாறு கோரி­னார்.

ஒரு வெகு­ஜன அமைப்­பில் சேரு­வ­தற்கு எல்­லோ­ருக்­குமே உரி­மை­யுண்டு. ஆனால் ஒரு வெகு­ஜன அமைப்­பில் அங்­கத்­த­வர்­களை இணைப்­ப­தற்­கும், நீக்­கு­வ­தற்­கும் நிறு­வ­ன­ம­யப்­பட்ட செயற்­பா­டு­கள் வரை­ய­றுக்­கப்­பட்டு இருக்க வேண்­டும். குறைந்­த­பட்­சம் தலை­மைக் குழு­வில் இருந்­த­வர்­கள் பல­ரு­ட­னா­வது கலந்­து­ரை­யா­டி­ய­தாக இருக்க வேண்­டும்.

தன்­னிச்­சை­யா­ன­தாக இருக்­கக்­கூ­டாது. தமிழ் மக்­கள் பேர­வை­யில் முடி­ வெ­டுப்­ப­தில் தனி­ந­பர் ஆளு­மைக்­கான ஆதிக்­கம் செலுத்­து­வது தவிர்க்­கப்­பட வேண்­டும். இது பேர­வை­யில் உள்ள பல­ரை­யும் அதி­ருப்­திக்கு உள்­ளாக்­கி­யதை உணர வேண்­டிய தரு­ணம் இது. இது தொட­ரு­மா­னால், பேர­வை­யின் அழி­வுக்கே வழி­வ­குக்­கும்.

முக்­கி­ய­மா­கப் பெய­ர­ள­வில் மக்­கள் அமைப்­பாக இருக்கா மல் அதற்­கான சட்ட அமைப்பையும், நிறு­வ­ன­ம­யப்­பட்ட ஜன­நா­ய­கக் கூட்­ட­மைப்­பை­யும், வேலைத்­திட்­டங்க­ளை­யும் வகுத்­துக்கொள்ள வேண் டும்.

இன்று தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யல் தீர்வு நடந்து முடிந்த இனப்­ப­டு­கொ­லைக்கு இலங்­கை­யைப் பொறுப்­புக் கூற­வைத்­தல் போன்ற விட­யங்­க­ளை­யும் தாண்டி, தமி­ழர் தாய­கத்­தில் உட­ன­டி­யாக கவ­னத்­தில் கொள்­ளப்­பட வேண்­டிய விட­யங்­க­ளும் ஏரா­ளம் உள்­ளன. காணா­மல் போன­வர்­க­ளைக் கண்டுபிடிப்­ப­தற்­கான போராட்­டம், அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லைக் கான போராட்­டம், காணி­ வி­டு­விப்புக்கான போராட்­டம் என்­ப­வற்­றுக்­குத் தமிழ் மக்­கள் பேரவை தலைமை தாங்க வேண்­டும். இந்­தத் தலை­மை­யின் ஊடாக அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு இப்­பி­ரச்­சி­னை­க­ளைத் தீர்க்­கச் சொல்லி அழுத்­தங்­க­ளைக் கொடுக்­க­வேண்டும்.

‘சிந்தனையாளர் குழாம்’ இல்லாத குறை உணரப்படுகிறது

எங்­க­ளி­டம் ஒரு சி।ந்­த­னை­யா­ளர் குழாம் (Think Tank) இல்­லாத குறையை இன்று தமி­ழி­னம் கடு­மை­யாக எதிர்­கொள்­கி­றது. தமிழ் மக்­கள் பேரவை ஆல­ம­ர­மாக வளர்ந்து கிளை பரப்­பி­யி­ருந்­தால், தமிழ் மக்­க­ளின் அத்­தனை பிரச்­சி­னை­க­ளை­ யும் அத­னால் இலா­வ­க­மாகக் கையாண்­டி­ருக்க முடி­யும். சிந்­த­னை­யா­ளர் குழாம் ஏற்­க­னவே தமிழ் மக்­கள் பேர­வை­யி­டம் உள்­ளது. ஆனால் அது செயற்றி­ற­னின்றி உள்­ளமை கவ­லை­ய­ளிக்­கி­றது. கல்வி, பொரு­ளா­தா­ரம், அபி­வி­ருத்தி, இயற்கை விவ­சா­யம் உள்­ளிட்ட பல துறை­க­ளில் எமது மக்­கள் பின்­தங்­கியே நிற்­கி­றார்­கள்.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் தலைவர்­க­ளும் ஆளு­மைப் பொறுப்­பில் உள்­ள­வர்­க­ளும், இந்த அமைப்­பின் வளர்ச்­சிக்கு அதிக நேரம் ஒதுக்க முடி­யாத நிலை இருக்­கு­மா­னால், அவர்­கள் தமது பத­வி­க­ளுக்­கும் பொறுப்­புக்­க­ளுக்­கும் ஏனை­ய­வரை நிய­மிக்க முயற்சி எடுக்க வேண்­டும். அப்­ப­த­வி­க­ளை­யும் பொறுப்­புக்­க­ளை­யும் கையேற்க ஒரு­வ­ரும் முன்­வ­ராத நிலை நில­வு­மா­ னால், தமிழ் மக்­கள் பேர­வை­ யைக் கலைப்­ப­தற்­குக் கூட தயங்­கக் கூடாது.

ஏனெ­னில் செயற்­ப­டாத ஓர் அமைப்பை வைத்­தி­ருந்து தமிழ் மக்­களை ஏமாற்­றத்­துக்கு உள்­ளாக்­கு­வதை விடுத்து இய­லா­மையை ஒத்­துக் கொண்டு வில­கு­வதே தர்­மம் ஆகும்.

அவ்­வாறு தமி।ழ் மக்­கள் பேரவை கலைக்­கப்­ப­டும் பட்­சத்­தில் அது நிறை­வேற்ற நினைக்­கும் வர­லாற்­றுப் பாத்­தி­ரத்தை எவர் பொறுப்­பேற்­பது என்ற கேள்வி எழ­லாம். ‘‘வர­லாறு, வெற்­றி­டங்­களை விடு­வ­தில்லை.’’ என்று சொல்­லப்­ப­டு­வ­துண்டு. தமிழ் மக்­கள் பேர­வைக்­கென வர­லாற்­றுப் பாத்­தி­ரம் உள்­ள­தால், அது இல்­லா­த­வி­டத்து இன்­னொரு செயற்றிற­னுள்ள அமைப்பு அதன் இடத்தை நிரப்ப உரு­வா­கும். அது வர­லாற்று நியதி. ஆகவே செயற்­ப­டா­மல் இருந்து கொண்டு வழியை மறித்­துக் கொண்டு இருப்­பதை விடுத்து, ஒதுங்கி வழி விடு­வதே தமிழ் மக்­க­ளுக்­குச் செய்­யக்­கூ­டிய நன்­மை­யா­கும்.

தெற்­கில் ஊழ­லா­லும் பொரு­ளா­தா­ரப் பிரச்­சி­னை­க­ளா­லும், உட்­கட்சிச் சண்­டை­க­ளா­லும் மைத்­திரி – ரணில் அர­சு சிறிது சிறி­தாகப் பல­மி­ழந்து கொண்­டி­ருக்­கி­றது. நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் மகிந்த ராஜ­பக்­ச­வின் எழுச்­சி­யைக் காட்­டு­கின்­றன. அவர் பிர­தி­நி­தித்­து­ வப்­ப­டுத் தும் சிங்­கள இன­வா­த­மும், மீண்­டும் மேல் எழுந்­துள்­ளது.

இந்த நிலை­யில் எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் ஆட்­சி­யைத் தங்க வைக்க மைத்­திரி – ரணில் அர­சு சிங்­கள இன­வா­தத்தை திருப்­திப்­ப­டுத்த முற்­ப­டு­வதைத் தவிர்க்க முடி­யாது. மகிந்த ஆட்­சிக்கு வரு­வ­தைத் தடுப்­பதை நோக்­க­மா­கக் கொண்டு மேற்­கு­ல­க­மும் இந்­தி­யா­வும் மைத்­திரி – ரணில் அரசின் இந்த நட­வ­டிக்­கை­க­ளைத் தடுக்­கப் போவ­தில்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் இதற்கு இணங்­கிப் போவ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­ப­டும்.

அதே­வேளை மைத்­திரி – ரணில் அரசும் இது­வரை இனப்­பி­ரச்­சி­னை­யைத் தீர்க்­கும் நோக்­கில் புதிய அரசமைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக எடுத்த நட­வ­டிக்­கை­கள் கிடப்­பில் போடப்­ப­டும். இந்த நிலை­யில் புதிய யாப்பு உருவாக்க முயற்­சி­களை உயி­ரு­டன் வைத்­தி­ருப்­ப­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை மட்­டும் நம்­பி­யி­ருக்க முடி­யாது.

அப்­ப­டி­யாக இருப்­போ­மா­னால், அதில் பலி­யா­கப் போவது தமிழ் மக்­க­ளின் அபி­லா­சை­களே. இவ்­வா­றான நிலை­யில் தமிழ் மக்­கள் பேரவை போன்ற அமைப்பு ஒன்று, அர­சி­யல் வேறு­பா­டு­க­ளைக் கடந்து தமிழ் மக்­கள் தரப்பு நியா­யத்தை சர்­வ­தே­சத்­துக்­கும் உரத்­துச் சொல்ல வேண்­டிய அவ­சி­யம் உள்­ளது.

தமிழ் மக்­கள் பேர­வை­ யால் பிரே­ரிக்­கப்­பட்ட அரசமைப்புக்கான முன்­யோ­ச­னைகளை தொடர்ந்­தும் தமிழ் மக்­கள் மத்­தி­யி­லும், பன்னாட்டுச் சமூ கத்துக்கும் பரப்ப வேண்­டிய அவ­சி­யம் உள்­ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!