பிலிப்பைன்சுடன் 6 உடன்பாடுகளில் இன்று கையெழுத்திடுகிறது சிறிலங்கா

சிறிலங்காவுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையில் இன்று ஆறு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐந்து நாட்கள் பயணமாக சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானத்தில், நேற்று பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார்.

நினோய் அக்கினோ அனைத்துலக விமான நிலையத்தில் சிறிலங்கா அதிபருக்கு பிலிப்பைன்ஸ் ஆயுதப்படையினரின் அணிவகுப்புடன் கூடிய செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்றிக்கோ ருரேரேயுடன் சிறிலங்கா அதிபர் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இதன்போது, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விவசாயம், பொதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஆறு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!