இந்தியாவிடம் இருந்து 1000 மில்லியன் டொலர் நிதியைப் பெறும் முயற்சியில் சிறிலங்கா

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவின் மத்திய வங்கியிடம் இருந்து 1 பில்லியன் டொலரை நாணயப் பரிமாற்றத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக, பதில் நிதியமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்கள் மற்றும் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட ஆட்சிக்குழப்பங்களால், ஏற்பட்ட பொருளாதார இழப்புக்களைச் சமாளிக்க, இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் உதவி கோரியுள்ளது.

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியிடம் இருந்து நாணயப் பரிமாற்றங்களின் மூலம்,400 மில்லியன் டொலரை பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே பேச்சுக்களை நடத்தியிருந்தது.

இந்தியாவின் ரிசர்வ் வங்கியும் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது,

இந்த நிலையில், இந்தியாவின் ரிசர்வ் வங்கியிடம் இருந்து 1000 மில்லியன் டொலரை நாணயப் பரிமாற்றங்களின் மூலம் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக, சிறிலங்காவின் பதில் நிதியமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!