சவேந்திர சில்வா விவகாரம் – நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளார் சம்பந்தன்

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பவுள்ளது.

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கடந்த வாரம் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனத்துக்கு, அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனங்களையும் எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே, போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டியவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு, அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, எதிர்ப்புத் தெரிவித்து பிரச்சினை எழுப்புவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

போர்க்குற்றவாளி என குற்றம்சாட்டப்படும் ஒருவரை, சிறிலங்கா அதிபர் உயர் பதவிக்கு நியமித்திருப்பது குறித்து தாம் கவலையடைந்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் அடுத்த அமர்வில் இந்தப் பிரச்சினையை எழுப்புவோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!