தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பணயக்கைதியாக அரசாங்கம் – விமல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பணயக்கைதியாக அரசாங்கம் மாறியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கூட்டமைப்பின் இணக்கப்பாடு இல்லாமல் வடக்கில் எந்த நடவடிக்கையையும் அரசாங்கத்தினால் மேற்கொள்ள முடியாது. அத்துடன் வடக்கு அபிவிருத்தி அமைச்சும் கூட்டமைப்பின் கீழே இருக்கின்றது.

வடக்கு அபிவிருத்தி அமைச்சை அவர்களுக்கு கீழ் வைத்துக்கொண்டு இன்று வடக்கில் கூட்டமைப்பு இனவாத, பிரிவினைவாத பிரசாரங்களை மேற்காெண்டுவருகின்றது.

கூட்டமைப்பின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் இருவர் முல்லைத்தீவு நயாரு விகாரைக்கு பலாத்காரமாக நுழைந்து அங்கிருப்பவர்களை எச்சரித்துள்ளனர்.

அத்துடன் அங்கு கோயில் கட்டப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படுவதில்லை. சுமந்திரனின் கட்டளையின் பிரகாரமே வடக்கில் பொலிஸாரும் செயற்படுகின்றனர். அரசாங்கம் கூட்டமைப்பின் பணயக்கைதியாக இருக்கும் வரைக்கும் இந்நிலை தொடரும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!