தமிழ் தேசிய கூட்டமைப்பு ஓற்றையாட்சி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது- அமைச்சர் கிரியல்ல

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு தமிழ் கட்சிகள் ஆதரவளிப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிமாh பண்டாரநாயக்க ஜேஆர்ஜெயவர்த்தன ஆகியோரும் அரசமைப்புகளை தயாரித்தனர் ஆனால் அவ்வேளை தமிழ் தரப்பினர் ஆதரவளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல்தடவையாக தமிழ் கட்சிகள் புதிய அரசமைப்பிற்கு ஆதரவளிக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்

சமஸ்டி தொடர்பிலோ வடக்குகிழக்கு இணைப்பிலோ எந்த பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி கொள்கைக்கு இணங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பை முன்வைக்கவில்லை அது குறித்த யோசனையே முன்வைக்கப்பட்டுள்ளது என அவர் குறி;;ப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!