வடக்கின் அபிவிருத்தி, அரசியல் பிரச்சினைகள் – ஆளுனருடன் விக்கி ஆலோசனை!

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகள் இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது என்று ஆளுநரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!