கூட்டமைப்பின் பிரதிநிதியாக சுமந்திரனை ஏற்கமாட்டோம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை, ஒருபோதும் கூட்டமைப்பின் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

“சுமந்திரன் என்பவர் ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விம்பம் அல்ல. அவர் ஒரு தனிமனிதரே. இவருடைய கருத்துக்களை நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களாகக் கூட ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் உயர்ந்த ஸ்தானத்திலேயே இருக்கிறது. கூட்டமைப்புக்கு என்று ஒரு புரிதல் இருக்கிறது.

சுமந்திரன் அடுத்த முறை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் தான் நாடாளுமன்றுக்கு வருவார். இதற்காகத்தான் அவர் அச்சுறுத்தும் பாணியில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அவர் தன்னை வீரராகக் காட்டிக்கொண்டாலும் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாகவோ, வடக்கு மக்களின் பிரதிநிதியாகவோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. கடந்த காலங்களில் வடக்குக்கு அல்ல, அநுராதபுரத்துக்குக் கூட செல்லாதவர்கள் தான் தற்போது வீரர்களாக தம்மை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.” என கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!