இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் பயங்கரமானது : எச்சரிக்கிறது சுதந்திரக்கட்சி

இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை இலங்கையை யுத்த பூமியாக மாற்றிவிடும். இந்தியா -சிங்கபூர் உடன்படிக்கையை விடவும் அமெரிக்க பாதுகாப்பு உடன்படிக்கை மோசமானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எச்சரித்துள்ளார்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி நாட்டை நாசமாக்க அரசாங்கம் முயற்சிக் கின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டுகின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம் பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றினை செய்துகொள்ள தீர்மானித்துள்ளது.

இந்த பாதுகாப்பு உடன்படிக்கை மூலமாக ஐக்கிய அமெரிக்காவின் இராணுவ வீரர், இராணுவ தளபாட, ரேடியோ கதிரலை பரிமாற்றல், தொடர்பாடல் பரிமாற்ற உடன்படிக்கை என்ற பெயரில் இந்த உடன்படிக்கை செய்துகொள்ள இரு நாட்டு அரசாங்கமும் தீர்மானித்துள்ளன.

இந்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை குறித்த முழுமையான தகவல்களை நான் பெற்றுக்கொண்டுள்ளேன்.

குறிப்பாக இந்த உடன்படிக்கையானது அமெரிக்க தூதரக பணியாளர்கள் கொண்டுள்ள பரந்த அறிவினை இலங் கை தூதரகமும் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலும் இரு நாட்டு பாதுகாப்பு படைகள் இணைந்து செயற் படும் நோக்கத்திலும் செய்துகொள்ளவுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர மேலும் தெரி வித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!