எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் மஹிந்த – கடமையை பொறுப்பேற்றார்!

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக அவர் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட போதிலும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை ஒப்படைக்காத நிலையில் புதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்பதில் தாமதம் நிலவி வந்தது. மஹிந்த தற்போது அலுவலகத்தை பொறுப்பேற்று கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!