ஈரான் இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல்

சிரியாவில் உள்ள ஈரானின் இலக்குகளை தாங்கள் தாக்க தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானிய புரட்சிப் படையின் சிறப்பு பிரிவான குட்ஸ் படைக்கு எதிராக தங்களின் தாக்குதல் நடவடிக்கை அமைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு (IDF) கூறியுள்ளது.

இந் நிலையில் நேற்று சிரியாவில் உள்ள கோலான் மலை பகுதி உச்சியில் உள்ள இலக்குகளில் இருந்து ஏவப்பட்ட ஒரு ராக்கெட்டை தாங்கள் இடைமறித்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளையில், நாட்டின் வான் பாதுகாப்பு பிரிவு இஸ்ரேலிய வான்வழி தாக்குதல் ஒன்றை முறியடித்துள்ளதாக சிரியாவின் அரசு ஊடகமான சனா குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, சிரியாவில் மூர்க்கத்தனமாக செயல்பட்டு கொண்டிருக்கும் ஈரான் குழு இலக்காகக் கொள்ளவும், எங்கள் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எவரையும் அழித்திடும் பணியில் ஈடுபடவும் நாங்கள் கொள்கை வகுத்துள்ளோம், என்று அவர் கூறினார்.

இந்த தாக்குதல் சம்பவம் ஏற்படுத்தியுள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து இன்னமும் முழுமையாக தெரிவியவில்லை.

இதுவரை சிரியாவில் தாங்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்து மிகவும் ஆபூர்வமாகத்தான் இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!