மெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு ; உயிரிழந்தோர் தொகை 109 ஆக உயர்வு

மெக்சிகோவில் எண்ணெய் குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் தொகை 109 ஆக உயர்வடைந்துள்ளது.

மெக்ஸிகோவின் ஹிடால்கோ மாகாணத்தில் உள்ள லஹூலிலிபன் நகரில் எரிபொருள் குழாயியை சட்ட விரோதமாக துளையிட்டு, எரிபொருள் கொள்ளையடித்து உள்ளூர் மக்களுக்கு விற்கும் சம்பவம் இடம்பெற்று விருகிறது.

அதற்கமைவாக கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று, துளையிடப்பட்ட மேற்படி எரிபொருள் குழாயில், கசிந்த பெற்றோலை சேகரிக்கச் சென்றபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின்பொழுது, கசிந்து கொண்டிருந்த எண்ணெயை பிடிப்பதற்காக பொதுமக்களில் 600 முதல் 800 பேர் அங்கு சென்றதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இவர்ளுள் பொதுமக்கள் 66 பேர் உயிரிழந்துள்ளனர், 76 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.

இந் நிலையில் உயிரிழந்தோரின் தொகை 109 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் விபத்துக்குள்ளானவர்களில் 40 பேர் மெக்சிகோ, ஹிடால்கோ மற்றும் மெக்சிகோ சிட்டி பகுதியில் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!