மைத்திரிக்கு தலைமைத்துவம் தெரியாது – நாட்டையும் கட்சியையும் வீழ்சியடைய செய்துள்ளார் ; குமார வெல்கம

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் ஒன்று வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் நாடும், சுதந்திர கட்சியும் பெரும் வீழ்ச்சியினையே அடைந்து வருகின்றது. இந்நிலைமை தொடருமாயின் சுதந்திர கட்சிக்கு எதிர்காலம் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக கருத்துரைப்பது தொடர்பில் அக்கட்சியின் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் அவரது நிலைப்பாட்டினை வினவிய பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போது முதலில் நடத்தப்பட வேண்டியது எத்தேர்தல் என்று அரசியல் கட்சிகளுக்கிடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம் பெறுகின்றன. மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போட்டுள்ளமையினால் அத்தேர்தரலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

பிறிதொரு தரப்பினர் அதற்கு எதிராக கருத்துக்களை தொடுக்கின்றனர். இன்றைய நிலையில் நாட்டில் முதலில் நடத்தப்பட வேண்டிய ஜனாதிபதி தேர்தலே தவிர பிறிதொரு தேர்தலும் கிடையாது. முதலில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து முறையான ஒரு தலைமைத்துவத்தை தெரிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே அத்தலைமைத்துவத்தின் ஊடாக ஏனைய தேர்தல்கள் இடம் பெற வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!