புதிய அரசியலமைப்பு : நாடு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது -கோத்தபாய ராஜபக்ஷ சாடல்

புதிய அரசியலமைப்பின்படி அதிகாரமுடைய ஜனாதிபதியொருவர் இருக்க மாட்டார். அதேபோன்று அதிகாரங்கள் குவிந்துள்ள பாராளுமன்றமும் இருக்காது.

இந்நிலையில் மத்திய அரசாங்கம் பலவீனப்படுத்தப்பட்டு மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு அவை மேலும் பலப்படுத்தப்படும். இது நாட்டை மிக ஆபத்தான நிலைக்கு இட்டுச்செல்லும். இதனை சமஷ்டி அரசியலமைப்பு என்று கூறமாட்டார்கள்.

வேறு ஏதேனும் பெயர்கள் மூலம் அழைக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பின் பெயரில் குழப்பம் இல்லை. சொற்களில் குழப்பம் இல்லை. ஆனால் அந்த அரசியலமைப்பின் வியூகத்திலேயே குழப்பநிலையும், நாட்டைப் பிரிக்கும் சமஷ்டிக்கான அடிப்படைகளும் உள்ளது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!