தவிர்க்க முடியாதவை தமிழர்களின் போராட்டங்கள்!!

வடக்கு மாகா­ணத் தமி­ழர்­கள் ஒரு சில­ தரப் பினரால் தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டு­வ­தாக அரச தலை­வர் கூறி­யுள்­ளமை வியப்­பைத் தரு­கின்­றது. காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் மற்­றும் அர­சி­யல் கைதி­கள் தொடர்­பாக வடக்­கில் இடம் பெறு­கின்ற போராட்­டங்­க­ளின் பின்­ன­ணி­யில் சில அரச சார்­பற்ற நிறு­வ­னங்­கள் செயற்­ப­டு­வ­தா­க­வும் அவர் கூறி­யதை எவ்­வாறு ஏற்­றுக்­கொள்ள முடி­யும்?

எப்­போ­துமே பாதிப்பை எதிர்­கொண்­டு­வ­ரும்
தமிழ் மக்­கள்

இந்த நாட்­டில் உள்ள தமி।­ழர்­கள் அனை­வ­ருமே ஏதோ­வொரு வகை­யில் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் தான் வாழ்­கின்­ற­னர். இதற்­குப் போரை மட்­டுமே கார­ணம் கூறிக்­கொண்டு இருக்க முடி­யாது. அதற்கு மேலாக, நாட்­டில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான இன­வா­தச் செயற்­பா­டு­கள் முக்­கிய இடத்தை வகிக்­கின்­றன. போரின் பின்­னரா­வது இன­வா­தம் ஒழிந்து தாம் நிம்­ம­தி­யாக வாழ­லா­மெ­னத் தமி­ழர்­கள் நினைத்­த­னர். ஆனால் அவர்­க­ளது விருப்­பத் துக்கு மாறா­கவே எல்­லா­மும் இடம்­பெற்று வரு­கின்­றன.

அரசு தமிழ் மக்­க­ளது குறை­க­ளைப் போக்­கு­வ­தில் அக்­க­றை­யு­டன் செயற்­ப­ட­வில்லை. இத­னால் எதை­யும் போரா­டித்­தான் பெற­வேண்­டும் என்ற நிலைக்கு அவர்­கள் தள்­ளப்­பட்­டுள்­ள­னர். போராட்­டம் அவர்­க­ளின்­மீது திணிக்­கப்­பட்­டுள்­ளது என்­பதுதான் உண்மை.

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் தமது உற­வு­க­ளைத் தேடிக் களைத்­துப் போயுள்ள நிலை­யில், தொடர்ப் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற ­னர். தமது உற­வு­கள் நாட்­டின் எங்கோ ஓரி­டத்­தில் உயி­ரு­டன் உள்­ள­தா­கவே இவர்­கள் இன்­ன­மும் நம்­பு­கின்­ற­னர். இவர்­களை எவ­ருமே போரா­டு­மாறு தூண்­டி­வி­ட­வில்லை. ஆனால் சில அரச சார்­பற்ற நிறு­வ­னங்­கள் போராட்­டத்­தில் ஈடு­ப­டு­மாறு அவர்­க­ளைத் தூண்­டு­வ­தாக அரச தலை­வர் கூறி­யுள்­ளதை ஏற்க முடி­ய­வில்லை.

இறு­திப் போர் இடம்­பெற்­ற­போ­து­கூட மகிந்த அரசு அரச சார்­பற்ற நிறு­வ­னங்­கள் மீது மிகக் கடு­மை­யாக நடந்து கொண்­டது. அவற்­றைக் கண்­கா­ணிக்­க­வும் செய்­தது. போரின் இறு­திக் கட்­டத்­தில், போர் இடம்­பெற்ற பகு­தி­க­ளி­லி­ருந்து அங்கு தொண்­டுப் பணி­க­ளில் ஈடு­பட்ட அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களை உட­ன­டி­யாக வெளியே­றி­வி­டு­மாறு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

போர்க் குற்­றங்­கள் தொடர்­பாக இந்த நிறு­வ­னங்­கள் அறிந்­து­வி­டக் கூடாது என்­பதே இதற்­கான பிர­தான கார­ண­மா­கும். இவர்­கள் வௌியே­று­வதை விரும்­பாத மக்­கள், அவர்­க­ளைத் தடுத்­துள்­ள­னர். அரச சார்­பற்ற நிறு­வ­னங்­கள் தம்­மு­டன் தங்­கி­யி­ருப்­பது தமக்­குப் பாது­காப்­பென அவர்­கள் நம்­பி­யதே இதற்­கான கார­ண­மா­கும். அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களை வௌி யேற்­றி­விட்டு மகிந்த அரசு தமது விருப்­பத்­துக்கு ஏற்­ற­வாறு போரை நடத்­தி­யது. மக்­கள் தங்­கி­யி­ருப்­ப­தற்­கென ஒதக்­கப்­பட்ட பாது­காப்பு வல­யப் பகு­தி­கள், மருத்­துவ மனை­கள் ஆகி­ய­ன­வும் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­கின. இதில் ஏரா­ள­மான மக்­கள் கொல்­லப்­பட்­ட­னர். ஆனால் இவற்­றுக்­கான சாட்­சி­யங்­க­ளைப் பெற­மு­டி­ய­வில்லை.இதன் மூலம் அர­சின் நோக்­க­மும் நிறை­வே­றி­யது.

அரச சார்­பற்ற நிறு­வ­னங்­கள் மீதான அரச தலை­வ­ரது குற்­றச்­சாட்­டுக்­கள் பொய்­யா­னவை

ஆனால் மகிந்த பாணி­யில், தற்­போ­தைய அரச தலை­வர் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­கள் மீது குற்­றம் சுமத்­து­வதை ஏற்க முடி­ய­வில்லை. அதை­விட காணா­மல் போன­வர்­க­ளும், அர­சி­யல் கைதி­க­ளும் இல்­லை­யெ­ன­வும் அவர் மீண்­டும் கூறி­யுள்­ள­தை­ யும் ஏற்­றுக் கொள்ள முடி­ய­வில்லை.

மேலும் படை­யி­னர் கைய­கப்­ப­டுத்தி வைத்­தி­ருந்த பொது­மக்­க­ளின் காணி­கள் தொடர்பா­க­வும் அரச தலை­வர் தெரி­வித்­த­ கருத் தையும் முரண்­பா­டா­ன­தொன்­றா­கவே கருத வேண்­டி­யுள்­ளது. பொது­மக்­க­ளின் காணி­க­ளில் பெரும் பாலா­ னவை ஏற்­க­னவே விடு­விக் கப்­பட்­டு­விட்­ட­தா­க­வும், சிறிய அள­வி­லான காணி­கள் மட்­டுமே விடு­விக் கப்­பட வேண்­டி­யுள்­ள­தா­க­வும் அவர் கூறி­யுள்ளமை கவ­னிக்­கத்­தக்­கது.

தமி­ழர்­க­ளுக்­குப் போராட்­டங்­கள் புதி­தா­ன­வை­ அல்ல. நாடு சுதந்­தி­ர­ம­டைந்த நாளி­லி­ருந்து அவர்­கள் தொடர்ந்து போரா­டிக் கொண்­டு­தான் இருக்­கின்­றார்­கள்.

தமி­ழர்­க­ளது போராட்­டங்­கள் வரி­சை­யில் மிகக் கடை­சி­யா­னது
இர­ணை­தீவு மக்­க­ளது போராட்­டம்

இறு­தி­யாக ஆரம்­பிக்­கப்­பட்ட இர­ணை­தீவு மக்­க­ளின் தொடர்ப் போ­ராட்­டம், உல­கின் கவ­னத்தை ஈர்த்­து­விட்­டது. பெரு­ம­ளவு மக்­கள் வச­தி­யீ­னங்­க­ளுக்கு மத்­தி­யில் தாம் வௌியேற்­றப்­பட்ட தமது பூர்­வீக மண்­ணில் இருந்து கொண்டு போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். இதைக்­கூட பிற­ரின் தூண்­டு­த­லால் இடம் பெறு­வ­தா­கச் சிலர் கூற­லாம்.ஆனால் இனி­யும் பொறுக்க முடி­யாது என்ற நிலை­யி­லேயே அந்த மக்­கள் போராட்­டத்தை ஆரம்­பித்­த­னர். இது அந்த மக்­கள் சுய­மாக எடுத்த முடிவு என்­ப­தால், அதைக் கொச்­சைப்­ப­டுத்த முடி­யாது.

அரச தலை­வர் இனி­யா­வது தமி­ழர்­க­ளின் போராட்­டங்­க­ளின் உண்­மை­யான தார்ப்­பா­ரி­யத்தை உணர்ந்து கருத்­துக் கூற வேண்­டும். வடக்­கில் புலி­கள் மீண்­டும் தலை­யெ­டுத்­துள்­ள­தாக இன­வா­தி­கள் பொய்­யான பரப்­பு­ரை­க­ளில் ஈடு­பட்­டு­வ­ரும் நிலை­யில், அரச தலை­வர் கூறு­கின்ற கருத்­துக்­கள் அவர்­களை மேலும் ஊக்­கு­விக்­கவே செய்­யும். அது மட்­டு­மல்­லாது தமி­ழர்­கள் தொடர்­பாக மற்­ற­வர்­கள் தவ­றாக நினைப்­ப­தற்­கும் வழி வகுத்­து­வி­டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!