பலாலி விமான நிலைய அபிவிருத்தி – சிறிலங்கா அரசுடன் கூட்டமைப்பு பேச்சு

சிறிலங்கா விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

“உள்நாட்டு மற்றும் பிராந்திய ரீதியான பயணிகள் விமான சேவைகளை நடத்தும் வகையில், பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.

இது நாட்டின் சுற்றுலாத் துறைக்குப் பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படமாட்டாது, எனினும், பயணிகள் விமானங்களை இயக்குவதற்கு ஏற்றவகையில் புனரமைப்புச் செய்யப்படும்.

சிறிய விமானங்களை மாத்திரமே இந்த விமான நிலையத்தின் மூலம் இயக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!