விமானம் – ஹெலிகொப்டர் நேருக்கு நேர் மோதி விபத்து ; 7 பேர் பலி

அஸ்டா பள்ளத்தாக்கில் ஹெலிகொப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகே அஸ்டா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.

அங்கு உள்ள மலையில் ஏறுவதற்காக 4 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர். விமானி மற்றும் மலையேற்ற பயிற்சியாளர் ஒருவர் ஹெலிகொப்டரில் இருந்தனர்.

இதற்கிடையே பயிற்சி விமானிகள் 3 சிறிய ரக விமானத்தில் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் பயிற்சியாளர் விமானத்தில் இருந்தார்.

இந் நிலையிலேயே ஹெலிகொப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதி மேற்படி விபத்து சம்பவத்துள்ளது.

இதனால் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் மாயமாகினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!