“தோட்ட நிறுவனங்கள் கூறுவது பொய் : 1000 ரூபா வழங்க வேண்டுமென்பது எமது நிலைப்பாடு”

தோட்ட நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்ற கருத்துக்கள் முற்றிலும் பொய்யானதாகும். அவர்களுக்கு இலாபம் வருகின்றது. அதனை அவர்கள் மறைத்து பொய்யான கணக்குகளை காண்பித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஆயிரம் ரூபா சம்பள கோரிக்கை நியாயமானது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் எனவும் குறிப்பிட்டார்.

தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வு குறித்த நெருக்கடி மிகப்பெரிய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசங்கத்தில் உள்ள தமிழ் கட்சிகளும் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகின்றது என வினவிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!