தேர்தல் ஆணையாளர் பதவி விலகுவதால் பிரச்சினை தீராது! – மஹிந்த

தேர்தல் ஆணையாளர் பதவி விலகுவதால் மட்டும் நாட்டின் குழப்பத்திற்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“நாட்டில் காணப்படுகின்ற குழப்ப நிலைகளுக்குத் தற்போதைய அரசாங்கத்தினது செயற்பாடுகளே காரணம். முதலில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். தற்போது தேர்தல் ஆணையாளர் தேர்தலை அரசாங்கம் விரைந்து நடத்தாவிட்டால் தான் பதவி விலகுவதாக கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையாளர் பதவி விலகுவதால் மட்டும் இந்தப் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.

எனவே அரசாங்கம் அனைத்துத் தரப்பினரதும் வலியுறுத்தலிற்கு அமைவாகவும் நாட்டினது தேசிய நலனைக் கருத்திற் கொண்டும் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!