பிரதமர் எமக்கு தெளிவுபடுத்த வேண்டும் : வெள்ளிக்கிழமை சந்திக்கிறோம் என்கிறது தமிழ் முற்போக்குக் கூட்டணி

தமிழ் முற்போக்குக் கூட்டணியும் அரசின் பிரதான பங்காளிக் கட்சியாகவுள்ளது. ஆனால் கூட்டு ஒப்பந்தம் குறித்து எம்மிடம் இது குறித்து எவ்வித பேச்சுகளும் இடம்பெற்றிருக்கவில்லை. அரசாங்கமும் ஒரு பிரதான பாத்திரத்தை வகித்துள்ளது. அது எந்த அடிப்படையில் என்ற காரணத்தை பிரதமர் எமக்கு பகிரங்கமாக தெளிவுப்படுத்த வேண்டும். ஆகவே நாம் பிரதமரை சந்தித்து இவற்றை வினவவுள்ளோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியினர் தெரிவித்துள்ளர்.

கூட்டு ஒப்பந்த விவகாரத்தில் அரசாங்கமும் ஒரு தரப்பாக செயற்பட்டு மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் பிரதமரின் தன்னிச்சையான செயற்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறிவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் நாளை மறுதினம்(01) பிற்பகல் பிரதமரை சந்தித்து உரிய காரணிகளை வினவவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!