தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான பிரேரணையை சபாநாயகர் முழுமையாக நிராகரிக்க வேண்டும் – பொதுஜன பெரமுன

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பித்துள்ள பிரேரணையினை சபாநாயகர் முழுமையாக நிராகரிக்க வேண்டும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூன் ஒரு உறுப்பினருடன் தேசிய அரசாங்கம் அமைப்பது என்பது அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு முரணானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி. எல்.பீறிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று செவ்வாய் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இன்று ஐக்கிய தேசிய கட்சி தேசிய அரசாங்கத்தை அமைக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளமையானது அரசியலமைப்பிற்கு முரனாணது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டணிமைத்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமற்றது. நாட்டு நலனுக்காகவே இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியினர் குறிப்பிடுவது மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!