தேசிய அரசு அமைக்க விடமாட்டோம்! – எஸ்.பி. சூளுரை

ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அதனைத் தடுக்க நீதிமன்றத்துக்கு செல்வோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

”ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து, அதன் ஊடாக அமைச்சரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரித்துக் கொள்ள ஐ.தே.க. சதித்திட்டம் தீட்டுகின்றது. ஐ.தே.க பண்டாடற்ற செயற்பாட்டில் ஈடுபடுமாயின் அதற்கு எதிரான நடவடிக்கைகளை நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொள்வோம்.

அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதிகாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே உள்ளமையால் ஐ.தே.க.வினால் கொண்டுவரப்படவுள்ள கோரிக்கைக்கு அவர் அனுமதி வழங்கமாட்டாரெனவும் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!